வெள்ளி, 18 டிசம்பர், 2015

குஜராத்தை போல தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளிலும் ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்:மத்திய அரசுக்கு கோரிக்கை

குஜராத்தியைப் போல தமிழ், மலை யாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய அரசியல் சாசனத்தால் அங்கீகரிக் கப்பட்ட மொழிகளிலும் ஐஐடி நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ஜேஇஇ நுழைவுத் தேர்வானது மெயின், அட்வான்ஸ்டு என 2 நிலைகளை உள்ளடக்கியது. என்ஐடி, ஐஐஐடி கல்லூரிகளில் சேர வேண்டுமானால் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு தேர்ச்சியே போதுமானது.

ஐஐடி கல்லூரிகளில் சேருவ தற்கு 2-வது நிலையான ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வும் எழுத வேண்டும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் இந்த தேர்வை எழுத முடியும்.
இந்த நிலையில், 2016-ம் ஆண் டுக்கான ஜேஇஇ மெயின் நுழை வுத் தேர்வு வருகிற ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுவரையில், ஜேஇஇ நுழைவுத் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தற்போது முதல்முறையாக குஜராத் மாநிலத்திலும், டாமன் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் கூடுதலாக குஜராத்தி மொழியிலும் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்குத் தரப் படும் இந்த சிறப்புச் சலுகை, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழக கல்வியாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
இதுகுறித்து மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறும் போது, “இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும். அப்படி இருக்க, குஜராத்தி மொழிக்கு மட்டும் சிறப்பு சலுகை அளித்திருப்பது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது. குஜ ராத்தி மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையை தமிழ் உள்ளிட்ட இதர அங்கீகரிக்கப்பட்ட மொழி களுக்கும் அளிப்பதுதான் நியாய மானது” என்றார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம். அனந்தகிருஷ்ணன் கூறும்போது, “இவ்வாறு குறிப்பிட்ட மொழி மாணவர்களுக்கு மட்டும் சலுகை காட்டுவது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல், தேவையில்லாமல் மொழிப் பிரச்சினை எழும். தமிழ் உள்ளிட்ட அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இதர மொழிகளி லும் தேர்வை நடத்துவதுதான் நியாயமானதாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, ‘‘தமிழ் உள்ளிட்ட அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
முன்னாள் மத்திய அமைச்ச ரும், காங்கிரஸ் கமிட்டி தேசியச் செயலாளருமான சு.திருநாவுக் கரசர் குஜராத் மாணவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்த சலுகைக்கு கண்டனம் தெரிவித் துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “குஜராத் தியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு தரப்பட்டுள்ள அதே சலுகையை தமிழ், மலையா ளம், கன்னடம் உள்ளிட்ட அரசி யல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட் டுள்ள 22 மொழிகளைத் தாய்மொழி யாகக் கொண்ட மாணவர்களுக்கும் அளிக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர், பிரதமரை வலியுறுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.    //tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக