செவ்வாய், 1 டிசம்பர், 2015

கார்த்தி சிதம்பரத்தின் வீடு..அலுவலகங்களில் வருமான வரி சோதனை.. வாசன் ஐ கேர், அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான  வாசன் ஐ கேர், அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங் நிறுவனங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை என இரண்டு துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கார்த்தியா  சிதம்பரமா  மாறன் பிறதேர்ஸா பெரிய பணகாரர்ர்ர்

 
கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனம் மூலமாக ஏர்செல் நிறுவனத்திற்கு பண பரிமாற்றம் நடந்ததாக சொல்லப்படுகிறது, குறிப்பாக 2006ஆம் ஆண்டில் இந்த பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடந்து வரும் சோதனை குறித்து அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக