புதன், 23 டிசம்பர், 2015

2ஜி ஸ்பெக்ரம் வழக்கில், அரசின் இறுதிக்கட்ட வாதங்கள் நிறைவு.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், அரசின் இறுதிக்கட்ட வாதங்கள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிபிஜ தொடர்ந்த வழக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அதோடு, மூன்று நிறுவனங்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞரான ஆனந்த குரோவர், கடந்த 8 மாதங்களாக குற்றஞ்சாட்டபட்டவர்களுக்கு எதிரான சிபிஐ-ன் வாதத்தை முன் வைத்து வந்தார்.
இந்நிலையில், அவரது இறுதி வாதம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பு வாதங்கள் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக நீதிபதி ஒ.பி. சைனி தெரிவித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கிலும் அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்களின் வாதங்களை ஜனவரி மாதம் 4ஆம் தேதி தொடரலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார் nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக