திங்கள், 2 நவம்பர், 2015

அஜீத்தின் வேதாளம் சசிகலா குடும்பத்தின் ஜாஸ் சினிமா வசம்!. Jazz Cinema aquires Vedalam

அஜீத் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் வேதாளம் படத்தின் மொத்த உரிமையையும் சர்ச்சைக்குரிய ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஎம் ரத்னம் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வேதாளம் படம் தீபாவளி தினத்தில் வெளியாகவிருக்கிறது. நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது இந்தப் படம். வேதாளத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை சசிகலா குடும்பத்துக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருப்பதாக முதலில் கூறினர்.  செங்கல்பட்டு விநியோகஉரிமையை ரெட் கார்ப்பெட் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கோவை உரிமையை சர்வம் சினிமாஸ், வட, தென்ஆற்காடு பகுதிகளில் பாண்டி சுரேஷ், திருச்சி தஞ்சை பகுதிக்கு எஸ்.பி.சுப்பையா, சேலத்துக்கு 7ஜிபிலிம்ஸ் சிவா, நெல்லை கன்னியாகுமரி பகுதிக்கு சேகர் என்றும் செய்திகள் வந்தன. தொடக்கத்தில் சென்னை வெளியீட்டு உரிமையை மட்டும் வைத்திருந்த ஜாஸ் சினிமாஸ் இப்போது ஒட்டு மொத்த தமிழக உரிமையையும் வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது மற்ற பகுதிக்கு வாங்கியவர்கள், ஜாஸ் சினிமாசுடன் ஒப்பந்தம் போட்டு வெளியிட்டுக் கொள்ளலாம். ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமானதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ரூ 1000 கோடிக்கு சத்யம் சினிமாசிடமிருந்து லக்ஸ் மல்டிப்ளெக்ஸை வாங்கியுள்ளது. மேலும் சில திரையரங்குகளை வாங்க முயற்சிப்பதாகவும் கூறப்படும் நிலையில், நேரடியாக திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more at: //tamil.filmibeat.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக