ஞாயிறு, 8 நவம்பர், 2015

Heart and Souls கணக்குகள் முடியுமுன்னே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது சிலருக்கு....இல்லை இல்லை எல்லோருக்கும்தான்


இந்த திரைப்படத்தை பார்பதற்கு  உண்மையில் மிகவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . இது மனிதர்களின் எத்தனையோ அடிப்படை கேள்விகளுக்கு மிக சவாலான ஒரு படமாகும். இன்னும் சரியாக சொல்லப்போனால் எந்த புத்தகத்திலும் எந்த ஞானியும் சொல்ல முடியாத அளவு பிறப்பு, இறப்பு, வாழ்க்கை, பிரபஞ்சம் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம்  விலாவாரியாக விளங்க வைக்க முயற்சிக்கிறது.
எனது அனுபவத்தில் இது என்னுள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம். இந்த உலகில் நாம் எப்படி வந்தோம்? எப்படி போகப்போகிறோம்? எங்கே போகப்போகிறோம்? எப்படி வாழவேண்டும்? இந்த வாழ்வின் அற்புதம்தான் என்ன?
கதை என்னவோ இறந்தவர்களை பற்றிதான் ஆனால் மிகவும் உயிர்த்துடிப்புள்ள படம்.
கணவன் இன்றியே தனது மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் ஒரு  தாய்
தனது இரவு வேலைக்கு செல்கிறாள். அவள் ஒரு பேரூந்தில் ஏறுகிறாள்.
அந்த பேருந்தில் வேறு ஒரு நடுத்ததர வயது பாடகன் ஒருவனும் ஏறுகிறான் . அவனோ தன்னம்பிக்கை இல்லாதவன். பெரிய மண்டபத்தில் நடக்கபோகும் ஒத்திகைக்கு சமுகம் அளிக்க பயந்து தப்பி ஓடிவந்து பேருந்தில் ஏறியவன் .

வேறு ஒரு பெண் அதில் ஏறுகிறாள். அவளோ தனது காதலன் கேட்டும் வேலையை விட்டு அவனோடு செல்ல மறுத்து பின்பு அது தவறு என்று எண்ணிக்கொண்டே இதே பேருந்தில் ஏறுகிறாள்.
நாலாவது நபர் ஒரு திருடன், ஒரு சிறுவனை ஏமாற்றி அவனது பழைய பெறுமதி வாய்ந்த முத்திரைகளை திருடி விற்று விட்டான். பின்பு அதை
திருப்பி எடுத்து அந்த சிறுவனிடம் கொடுக்க எண்ணிக்கொண்டே பேருந்தில் ஏறுகிறான்.
இந்த நான்கு பயணிகளோடு பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதன் சாரதி அருகில் வந்து கொண்டிருந்த வேறு ஒரு காரில் உள்ள பெண்ணை ரசித்து பார்த்துக்கொண்டே வந்து வேறு ஒரு காரோடு மோதி விடுகிறான் .பேருந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதி கீழே விழுந்து நொறுங்கி விடுகிறது .
அதே சமயம் எதிர்திசையில் வந்த காரில் ஒரு பெண்ணுக்கு காரிலேயே குழந்தை பிறந்து விடுகிறது
அந்த விபத்தில் பேருந்தில் பயணித்த நான்கு பயணிகளும் சாரதியும் இறந்து விடுகிறார்கள்.
எதிர்திசையில் வந்த காரில் உள்ள பெண்ணுக்கு சுகமாக குழந்தை பிறந்து விடுகிறது.
ஒரு ஜீவன் இந்த உலகிற்கு வரும் அற்புத நேரத்தில் அதே இடந்தில் நான்கு பயணிகளும் சாரதியும் இறந்து விடுகிறார்கள்.
இறந்த நான்கு பயணிகளும் ஆத்மா ரூபத்தில் உடலை விட்டு செல்லும் பொழுது ஆத்மா ஒன்று புது உடலை எடுத்து பூலோகம் வருகிறது ...அதே நேரம் அதே இடம் .
அந்த குழந்தைக்கும் அவர்களுக்கும் ஏதோ ஒரு இனம் புரியாத பிணைப்பு உண்டாகிவிடுகிறது.
சதா அந்த குழந்தையோடுதான் அவர்களின் கொண்டாட்டம் எல்லாம்.குழந்தையின் கண்ணுக்கு மட்டும் அவர்கள் தெரிகிறார்கள்.
பின்பு நடக்கும் வேடிக்கை ....வேடிக்கையோடு தெரியவரும் அதிசயங்கள்...அற்புதங்கள்.
ஓஹோ இது இப்படித்தான் இருக்குமோ?
சாதாரண அறிவுக்கு இது நம்ப முடியுமா என்று சிந்திக்க முன்பாகவே எங்களை எங்கேயோ கொண்டு சென்றுவிடும் கதை முடிசுகள் ...அவை கூறும் தத்துவங்கள் மிகவும் அற்புதமானது .
பேருந்தில் பயணித்த நான்கு பேரும் வாழ்க்கையில் முற்றுபெறாத கணக்குகள் கனவுகளோடு  இறந்து போனவர்கள் .
ஆனால் அவர்கள் மறைந்து   போகவில்லை எதோ ஒரு விதத்தில்  மறைந்து மறையாமல் வாழ்ந்து  தங்கள் வாழ்வின் கணக்குகளை கொஞ்சம் சரி செய்கிறார்கள். அதற்கு அந்த சிறுவனை  நாடுகிறார்கள்.அவன் வளர்ந்து பெரியவானாகி  இவர்களின் கணக்குகளை  சரிசெய்ய உதவுகிறான்.
அந்த முயற்சியில் அவனது  வாழ்க்கை கணக்கே குழப்பமாகிறது.

இது அறிவு பூர்வமானதா என்று யாருமே சிந்திக்க முடியாத அளவு இது உணர்சிகரமாக நூறு வீதம் உண்மைதான் என்ற முடிவுக்கு எம்மை அழைத்து சென்று விடுகிறது,
அவ்வளவு நேர்த்தியான கதை நுட்பமான காட்சிகள் .
யாரும் இலகுவில் புறந்தள்ளி விட முடியாத அனுபவத்தை இத்திரைப்படம் தருகிறது.
இந்த படம் நான் பார்த்து பலவருடங்கள் ஆகிவிட்டது . சுமார் இருபது தரமாவது இதை பார்த்திருப்பேன் .இன்னும் எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது.
பல வருஷங்களுக்கு முன்பாக எனக்கு தெரிந்த பெண்ணின் இளவயது மகன் தற்கொலை செய்துகொண்டான். அவருக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.
ஒருவராலும் அந்த பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தை கூற முடியவில்லை.
ஒருநாள் அவரை அவரது உறவினர்கள் என்னிடம் அனுப்பினார்கள். நான் ஏதாவது ஆறுதல் வார்த்தை கூறி கொஞ்சமாவது சமாதான படுத்துவார் என்று கருதினார்கள். நான் என்ன வார்த்தைகள் கூறி அமைதி படுத்த முடியும்?
ஏதோதோ கூறினேன் .எனது வார்த்தைகளே என்னை பார்த்து சிரிப்பது போல உணர்ந்தேன்.வார்த்தைகள் எல்லாம் வெறுமையாகி போய்விட்டிருந்தன.  அவர் போகும் பொழுது தயங்கி தயங்கி அவரிடம் இந்த படத்தின் காசெட்டை கொடுத்து மன்னிப்பு கேட்டுகொண்டே முடிந்தால் இதை கொஞ்சம் பாருங்கள் என்று கொடுத்தேன்,
அவர் வாங்கி கொண்டு போனார்,
சில மணித்தியாலங்கள் கழித்து எனக்கு தொலைபேசியில் பேசினார் : மனோ நான் எதோ மிகவும் ஆறுதலாக இருக்கிறேன் .என்னவோ தெரியவில்லை இந்த படம் எனது மகன்தான் எனக்கு அனுப்பி இருக்கிறான் போல தெரிகிறது, இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டாவது தடவையும் பார்க்க போகிறேன் என்றார்.
அவரது மகன் மிகவும் நல்லவன் என்னவோ தெரியவில்லை..Depression என்று சொன்னார்கள். மிகவும் மோசமான விதத்தில் தற்கொலை செய்துகொண்டிருந்தான்.
அது அந்த தாயை என்ன பாடு படுத்தி இருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
அப்படிபட்ட ஒருவரை இந்த படம் மாற்றி விட்டது. அவர் இப்போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறார்.
அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது?
ஒவ்வருவரும் சாமி கும்பிடுகிரர்களோ இல்லையோ இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும்.
உண்மையாகவே இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு இறப்பு ரகசியங்களை இது கொஞ்சம் அவிழ்த்து விடுகிறது என்றுதான் நான் நம்புகிறேன்,
இந்த படம் கொடுக்கும் அறிவை நல்ல உணர்வை எந்த புத்தகமும் கொடுக்க முடியாது. இது தான் உண்மையான Feel good movie.         cinepass.blogspot.com

wickipedia  In San Francisco, 1959, four people embark on the same bus. A single mother named Penny Washington leaves her three children at home to work in her night shift as a telephone operator. A singer named Harrison Winslow is afraid of the stage and quits his audition. A waitress named Julia regrets turning down her boyfriend John's marriage proposal and leaves her job to seek him out. A small-time thief named Milo Peck unsuccessfully attempts to retrieve a collection of vintage stamps that he had stolen from a young boy. However, the bus driver, Hal, has a serious accident, killing himself and everyone on board.
Meanwhile, Frank Reilly is driving his pregnant wife Eva to the hospital. Frank successfully swerves to escape the bus, just before it falls off an overpass, but Eva delivers their baby in the car. Hal ascends into the next life, but the souls of the four passengers become the guardian angels of the boy, Thomas Reilly, and can be seen only by him. Seven years later, the boy's parents and teachers begin to worry about his obsession with these "imaginary friends". After realising their presence is harming Thomas, the quartet decide to become invisible also to him.
Thirty-four years later, in 1993, Hal returns with his bus and prepares to take them to the next life. The quartet learns from Hal that they had all those years with Thomas to resolve the problems they left behind, as he is their corporeal form. After convincing Hal to buy some more time for them to rectify their unfinished lives, they return to Thomas, who is now a tough businessman and indecisive in his relationship with girlfriend Anne, and ask him for his help.
Thomas reluctantly agrees and, through a series of hilarious mishaps, the lost souls are freed: Milo by returning the stolen stamps, Harrison by facing his fears and singing to a live audience, Penny by discovering the fates of her children and Julia by encouraging Thomas to repair his relationship with Anne, as she was never able to do the same with John. In the end, Thomas becomes a better man and he dances with Anne as four stars twinkle in the night sky, symbolizing that Penny, Julia, Harrison and Milo are finally at peace.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக