வியாழன், 12 நவம்பர், 2015

Ex எம்பி ராஜேந்திரன் சுடப்பட்டு மரணமானார்...முன்பு அதிமுக இப்போ திமுக....

கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவில்பட்டி புதிய பேருந்து நிலையில் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்தார். >இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரது உடலையும் அங்கிருந்த துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜேந்திரன், 1995ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்துள்ளார். அ.தி.மு.க., சார்பில் எம்.பி., பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேந்திரன், கடைசி வருடத்தில் தி.மு.க.,வில் இணைந்தார். தற்போது அவர் துாத்துக்குடி தி.மு.க., தெற்கு மாவட்ட தலைவர் பதவியில் உள்ளார். அவரது வீடு கோவில்பட்டி - நெல்லை நெடுஞ்சாலையில் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக