புதன், 4 நவம்பர், 2015

சவுதி அரேபியா Ex மன்னரின் ரகசிய மனைவிக்கு 23 மில்லியன் டாலர் இழப்பீடு..


சவுதி அரேபியாவின் காலஞ்சென்ற மன்னர் பாஹ்த்  இவரது ரகசிய மனைவி என கூறப்படும் பெண்ணுக்கு இழப்பீடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பிறந்த ஜனான் ஹார்ப் என்பவர் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செயத வழக்கில் சவுதி அரேபியாவின் இளவரசரும் உள்துறை அமைச்சருமாக இருந்து பின்னர் மன்னரான பாஹ்தை கடந்த 1968ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாகவும் மன்னரது மகன் இளவரசர் அப்த்-அல்-அஜீஸ்-பின்-ஃபாஹ்த் தன்னை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதாக உறுதியளித்திருந்தார் தான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால், மன்னரின் குடும்பத்தினர் தமது உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்றாலும், வெளியில் தெரியாமல் மன்னருடனான திருமணம் நடைபெறுவதற்கு முன்னர் தான் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாவும் ஹார்ப் நீதி மன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த அந்த அம்மையர் கூறுவது நம்பும்படியாக உள்ளது எனவும் 68 வயதாகும் அவருக்கு 23 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இழப்பீடு மட்டுமன்றி அவருக்கு லண்டனில் இரண்டு சொகுசு அடுக்குமாடி வீடுகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அடுத்த நான்கு வாரங்களுக்குள் இந்த இழப்பீட்டையும், வீட்டையும் சவுதி இளவரசர் வழங்கவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பஹாத் 1982 ஆம் ஆண்ண்டு மன்னரானார். 2005 ஆம் ஆண்டு மரணமடைந்தார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக