திங்கள், 30 நவம்பர், 2015

நான் காதலித்தேன்.. நீங்களும் காதலியுங்கள்’ – சித்தாரா

‘‘நானும் காதலித்தேன். ஆனால் அது கல்யாணத்தை சென்றடையவில்லை. அது ஒரு மறக்கமுடியாத வசந்த காலம். எங்கள் இருவரின் தனிமையை பாதுகாக்க வேண்டியதிருப்பதால் இதற்கு மேல் அதை பற்றி பேசவிரும்பவில்லை. ஆனால் எல்லோரும் ஒருதடவையாவது காதலிக்கவேண்டும். காதல் அவ்வளவு அழகானது’’திருமணம் செய்யாததால்தான் இவ்வளவு அழகாக இருக்கிறீர்களா? ‘‘உடல் குண்டாகிவிடுவது எனக்கு பிடிக்காது. முன்பிருந்தே நான் உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன். ஒரு சினிமாவுக்காக உடல் எடையை கூட்டினேன். இப்போது அதை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். எனது நீண்ட கூந்தல், அம்மாவிடம் இருந்து பாரம்பரியமாக எனக்கு கிடைத்தது’’ மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதல் வருமா?


‘‘ஏன் வரக்கூடாது? காதலுக்கு வயது தொடர்பான எல்லை எதுவும் கிடையாது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் நான் இப்போதும் காதலிக்கக்கூடிய பருவத்தில்தான் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் காதல் உதயமாகலாம்’’

சித்தாராவிடம் காதல் உணர்வுகள் பொங்கி நிற்கிறது!dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக