ஞாயிறு, 22 நவம்பர், 2015

இந்திராணி முகர்ஜி கணவரின் சொத்துக்காகதான் மகள் ஷீனா போராவை கொலை செய்தார்....அம்பலம்..

மும்பை: இந்திராணி முகர்ஜி, தன் மகள் ஷீனா போராவை, ஏன் கொலை செய்தார் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. >வட மாநிலங்களில் பிரபலமான, 'டிவி' சேனலின் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவர் பீட்டர் முகர்ஜி, 59. இவரது மனைவி இந்திராணி, 43. ஏற்கனவே, இருமுறை திருமணமான இந்திராணி, மூன்றாவதாக பீட்டர் முகர்ஜியை, 2002ல் திருமணம் செய்தார். இந்திராணிக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த ஷீனா போரா, 24, என்ற மகள் இருந்தார். பீட்டர் முகர்ஜிக்கும், முதல் மனைவி மூலம், ராகுல் என்ற மகன் உள்ளார்.இந்நிலையில், தன் மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக, சில மாதங்களுக்கு முன், இந்திராணி கைது செய்யப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும், கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினமும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.  டிவி சீரியலைகூட கேவலமா இருக்கு. சீ... தூ பணத்துக்காக பெற்ற மகளையே கொலை செய்த தாய் ....


இதுகுறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: ஷீனா போரா கொலை வழக்கு விசாரணையில், பல முக்கிய ஆதாரங்களை திரட்டியுள்ளோம். இதில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஷீனா தன் மகள் என்பதை மறைத்து, சகோதரி என, பீட்டர் முகர்ஜியிடம், இந்திராணி அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், ஷீனா போராவும், பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலும், திடீரென காதலிக்க துவங்கினர்; இது, முறையற்ற காதல் என்பதை அறிந்த இந்திராணி, தன் மகள் ஷீனாவை கண்டித்தார்; ஷீனா, அதை ஏற்கவில்லை. இதற்கிடையே, ஷீனாவுக்கும், ராகுலுக்கும், கோல்கட்டாவில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் நடந்தால், முறையற்ற உறவாகி விடுமே என, பயந்தார் இந்திராணி. மேலும், இந்த திருமணம் நடந்தால், பீட்டர் முகர்ஜி மூலம், தனக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் சொத்துகள், ராகுலுக்கும், ஷீனாவுக்கும் போய்விடும் என, பயந்த இந்திராணி, ஷீனாவை கொலை செய்துள்ளார்.இந்திராணிக்கும், ஷீனாவுக்கும் தகராறு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்திராணிக்கும், அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவுக்கும் பிறந்த மகளான விதி கன்னா, ஷீனாவுக்கு ஒரு, 'இ - மெயில்' அனுப்பிஉள்ளார். அதில், 'உனக்கும், ராகுலுக்கும் உள்ள உறவால், அம்மா, மிகவும் கோபமாக இருக்கிறார்; மிகவும் கவனமாக இரு. ராகுலுக்கும், உனக்கும் உள்ள உறவை முறிக்க, அம்மா, எந்தவிதமான மோசமான முடிவையும் எடுக்கலாம்' என, எழுதியுள்ளார். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

'அப்பா நிரபராதி':

பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலிடம், சி.பி.ஐ., அதிகாரிகள், இரு நாட்களாக, மும்பை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இதன்பின், நேற்று, அவரை விடுவித்தனர். அப்போது, அவர் கூறுகையில், ''என் தந்தைக்கும், இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை; அவர் நிரபராதி. அவருக்குள்ள நற்பெயரை கெடுப்பதற்காக, வேண்டுமென்றே இந்த வழக்கில் அவரை சிக்க வைத்துள்ளனர்,'' என்றார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக