திங்கள், 9 நவம்பர், 2015

அருண் சோரி : மோடி, அமித் ஷா, அருண் ஜெட்லியே பீகார் தோல்விக்கு பொறுப்பு...பாஜக வேகமாக உடைகிறது...

நாடு முழுவதும் பீகார் தேர்தல் பெரும்
அதிர்வை ஏற்படுத்தியுள்ள சூழலில், பா.ஜ.க-வின் தேர்தல் தோல்விக்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியவர்களே காரணம் என்று முன்னாள் மத்திய மந்திரி அருண் சோரி குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய பா.ஜ.க ஆட்சியின் போது நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் மோடியை மையப்படுத்திய தேர்தல் பிரச்சாரம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும், மேலும் பா.ஜ.க வின் பிரிவினை உத்திகளும்தான் படுதோல்விக்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று நிருபர்களைச் சந்தித்த அவர், பீகார் தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பு என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகையில், “இதற்கு மோடி, ராஜ தந்திரி(அமித் ஷா) அருண் ஜெட்லி இவர்கள் தான் பொறுப்பு, இவர்களைத் தாண்டி பொறுப்பாளியான நான்காவது நபர் கட்சியிலோ அரசாங்கத்திலோ இல்லை.” என்றார். அருண் ஷோரி பீகார்  தேர்தலுக்கு முன்பே  மோடியை  தாக்க தொடங்கி இருந்தார் என்பதை கவனிக்க வேண்டும். வெறும் டுபாக்கூர் வாக்குறுதிகளை  அள்ளி வீசி  முதலாளிகளின் பணத்தால் ஆட்சியை பிடித்த  மோடியின்  சுயரூபத்தை பாஜாகாவிலேயே பலரும் அறிவார்கள். இவ்வளவு நாளும் அவர்களை கட்டிபோட்டது மோடியின் வெற்றி இமேஜ்தான் ..இப்போ அது காலி.....பாஜக பெரும் புயலை சந்திக்க தொடங்கி விட்டது...பெரும் பிளவை நோக்கி செல்கிறது,

“தேர்தல் பிரச்சாரத்தில் எது தவறாய் போனது” என்ற கேள்விக்கு எல்லாமும்தான் என்ற அருன் சோரி, அது குறித்து விரிவாக கேட்டபோது, “நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் வரும் படி செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அக்கட்சியின் தலைவர் ஒருவரே அது வெற்று வாக்குறுதி என்று எளிமையாகக் கூறிவிட்டார். இதனால் மக்கள் அவர் பீகாரில் அளித்த வாக்குறுதிகளும் இதே போல் வெற்று வாக்குறுதிகள்தான் என்று நினைத்து விட்டனர் என்று கூறினார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக