வியாழன், 5 நவம்பர், 2015

காதலிக்க மறுத்தால் மாணவியின் கைகளை வெல்டிங்மிஷனை கொண்டு துண்டித்த வாலிபர்

பெங்களூரில் காதலிக்க மறுத்ததால் மாணவியின் கைகளை வெல்டிங்மிஷனை கொண்டு துண்டித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் அருகே உள்ள மாண்டியாவில் வசித்து வருபவர் பிருந்தா (வயது 16) இவரை ரவிக்குமார் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.தனது காதலை பல முறை கூறியும் பிருந்தா ரவிக்குமாரின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் காதலியை பழிவாங்க நினைத்தார் ரவிக்குமார். சம்பவத்தன்று மாணவி பிருந்தா, கடந்த சனிக்கிழமை மதியம் 2.30 மணி அளவில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  அந்த வழியாக தனது நண்பர்களுடன் வந்த ரவிக்குமார் பிருந்தாவை வழி மறித்தார். தான் வைத்து இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசி  வெல்டிங் மிஷினை கொண்டு பிருந்தாவின் கைகளை துண்டித்தார். பின்னர் நண்பர்களுடன் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.


வலியால் அலறி துடித்த பிருந்தாவை அருகில் உள்ளவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.பின்னர் டாக்டர்கள் பிருந்தாவிற்கு அறுவை சிகிச்சை செய்து கைகளை ஒட்டவைத்துள்ளனர். இது குறித்து உடனடியாக பிருந்தாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. விரைந்து வந்த அவர்கள் மகளின் கைகளை துண்டித்து இருப்பதை கண்டு கதறி அழுதனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயக்கம் தெளிந்த பிறகு பிருந்தா போலீசாரிடம் கூறுகையில்,

நான் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது என் முகத்தின் மீது மிளகாய் பொடியை தூவி தாக்கினர். அவர்கள் முதலில் என் முகத்தை வெல்டிங் மிஷினால் தாக்க வந்தனர். நான் தடுத்த போது எனது கைகள் வெல்டிங் மிஷின் பட்டு துண்டானது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாணவியின் தாயார் கூறுகையில்,

அவள் கைகள் இணையவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது?நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று மாணவியின் தாயார் கூறினார்.

மாணவிக்கு சிகிச்சை அளத்த டாக்டர்கள் கூறுகையில், மாணவியின் கைகள் தற்போது அறுவை சிகிச்சை மூலம் அவரது கைகள் இணைக்கப்பட்டுள்ளது.அவரது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.பூரணமாக குணமாக 6 வாரங்களுக்கு மேல் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

காதலிக்க மறுத்த மாணவியின் கைகள் துண்டிக்கபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக