ஞாயிறு, 15 நவம்பர், 2015

பாரிஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெல்ஜியத்தில் பலர் கைதாகியுள்ளனர்

பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பலரை, பெல்ஜிய நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். . தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான பட்டாகிளான் அரங்கத்திற்கு அருகே நின்ற கார் ஒன்று, பெல்ஜிய நாட்டின் பதிவுத் தகட்டுடன் காணப்பட்டதை அடுத்து, இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பெஜ்ஜியம் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர், வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் இருந்துளளார் என பெல்ஜியப் பிரதமர் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
  பாரிஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மிகக் கொடூரமான இத்தாக்குதல்களை நடத்தியவர்களில் ஒருவர் பாரிஸின் புறநகர்ப்பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் கடந்த காலத்தில் குற்றச் செயல்கள் புரிந்துள்ளதற்கான பதிவுகள் உள்ளன என்றும் பிரெஞ்ச் அரசின் தலைமை வழக்கறிஞர் பிரான்சுவா மொலீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மற்றொரு தாக்குதலாளி சிரிய நாட்டு கடவுச் சீட்டு வைத்திருந்தார் எனவும் பிரெஞ்சு அரச தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரின் பல இடங்களில் கடைகள் சனிக்கிழமை(14.11.15) மூடியிருந்தன அனைத்து தாக்குதல்தாரிகளும் தானியங்கி கலாஷ்னிகோவ் துப்பாக்கியை வைத்திருந்ததுடன் தற்கொலை அங்கியும் அணிந்திருந்தனர் எனவும் அவர் மேலும் கூறினார். இத்தாக்குதல் பிரான்ஸின் மீது நடத்தப்பட்ட ஒரு போர் என்றும், தமது அரசு ஈவு இரக்கமின்றி எதிர்தாக்குதலை நடத்தும் எனவும் பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸுவா ஒலாந் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக