வியாழன், 12 நவம்பர், 2015

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் சோனியா, கெஜ்ரிவால், மம்தா ,அகிலேஷ் யாதவ் ங்கேற்கிறார்கள்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அம்மாநில முதல்–மந்திரியாக நிதிஷ்குமார் 5–வது முறையாக பதவி ஏற்க உள்ளார் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை வரும் 14–ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 14–ந்தேதி நடக்கும் கூட்டத்தில் பதவி ஏற்பு விழா தேதி அதிகாரப்பூர்வமாக முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளது. இருப்பினும், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வருகின்ற நவம்பர் 20-ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பா.ஜ.க., அல்லாத மாநிலங்களின் பெரும்பாலான முதல்-மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி தேவகவுடா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி பாபுலால் மராண்டி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.


ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ் முக்கிய தலைவர்களும் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

பா.ஜ.க.,விற்கு எதிராக வலுவான கூட்டணி உள்ளதை இந்த பதவியேற்பு விழா வெளிப்படுத்தும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி.தியாகி கூறியுள்ளார்.

லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து 16 மந்திரிகளும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 15 மந்திரிகளும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 மந்திரிகளும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக