வியாழன், 5 நவம்பர், 2015

அம்மாவும் ஆஸ்தியும்.....கொள்ளை அடித்த காசை வீசி வாக்குகளை அள்ள முடியுமா?


கொஞ்சம் ரிலாக்ஸ்டா அரசுப் பணிகளை கவனிக்கலாம்னு மலையேறி கொடநாடு போன இடத்திலும் ஜெ.வுக்கு டென்ஷன். காரணம், சசிகலா-இளவரசி தரப்பு வாங்கியிருக்கும் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான தியேட்டர் விவகாரம் ஆதாரத்துடன் அம்பலமானதுதான்.''""இந்த சொத்து பற்றித்தான் நம்ம நக்கீரன் போன ஜூன் 27-ந் தேதியே ‘தியேட்டர் காம்பளக்ஸை விலைக்கு வாங்கிய கார்டன்'ங்கிற தலைப்பில் அம்பலப்படுத்தியிருந்ததே..'' ""சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால். அதில் சத்யம் நிறுவனத்தின் எஸ்.பி.ஐ. சினிமாஸுக்கு சொந்தமான லக்ஸ் தியேட்டருக்கு போலீஸ் தரப்பிலும், கார்ப்பரேஷன் தரப்பிலும் அனுமதி கொடுக்காம இழுத்தடிச்சாங்க. கார்டன் தரப்பில் முதலில் அந்த தியேட்டரை லீசுக்கு கேட்டதோடு, அப்புறமா சொந்தமாக்கும் வேலை களும் நடந்தன. இதைத்தான் நம்ம நக்கீரன் அப்பவே வெளி யிட்டிருந்தது. லக்ஸ் தியேட்டரை ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருக்குது. இந்த ஜாஸ் சினிமாஸோட பழைய பேரு ஹாட் வீல்ஸ். அதன் போர்டு மீட்டிங்கில் சசிகலாவும் இளவரசியும் கலந்துக்கிட்டதையும், இளவரசியை சேர்மனா தேர்ந்தெடுத்ததையும் குறிப்பிடும் மினிட்ஸ் நோட் இப்ப வெளியானது தான் கொடநாட்டில் ஜெ.வை செம டென்ஷனாக்கியிருக்குது.''


""எப்படி இந்த மினிட்ஸ் வெளியானதாம்?''""கொடநாடு முகாமில் பிஸியா இருக்கும் சில அதிகாரிகள் என்கிட்டே பேசுனாங்க தலைவரே... மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை வெப்சைட்டில் எந்தெந்த கம்பெனியில் யார் யார் டைரக்டர்கள்னு விவரம் ஓப்பனா வெளியிடப் பட்டிருக்கும். அதில்தான் மிடாஸ் மது உற்பத்தி கம்பெனியின் டைரக்டர்களான சிவகுமாரும் கார்த்திகேயனும்தான் ஜாஸ் சினிமா நிறுவனத்தின் டைரக்டர்கள்னு விவரங்கள் வெளியாகியிருந்தன. இந்த கம்பெனியோட போர்டு மீட்டிங்கின் மினிட்ஸ் விவரங்களை லீக் செய்த கருப்பு ஆடு யாருன்னு கோபமா ஜெ. கேட்டதோடு, அதைக் கண்டுபிடிக்கும்படி உளவுத்துறைக்கு அசைன் மெண்ட் கொடுக்கப்பட்டிருக்குதாம். உளவுத்துறை யோ மத்திய பா.ஜ.க அரசு தரப்பிலிருந்துதான் இது வெளியாகியிருக்கணும்னு முதல் கட்ட ரிப்போர்ட் கொடுத்திருக்குதாம்.''


""மத்திய அரசுதான் ஜெ. தரப்போட நல்லுறவில் இருக்குதே?''""இருந்தாலும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி அ.தி.மு.க தலைமை எந்த கமிட்மெண்ட்டும் கொடுக்கலையே.. அதில் பா.ஜ.க மேலிடம் அப்செட்தான். அதனால நெருக்கடி களான விஷயங்களைத் தோண்டித் துருவுறாங் களாம். ஹாட் வீல்ஸ் கம்பெனியோட போர்டு மீட் டிங் மினிட்சும் மத்திய அரசு வசம் இருந்ததால அங்கிருந்துதான் லீக் ஆகியிருக்கணும்னு மாநில உளவுத்துறை சந்தேகப்படுது. நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி வசம்தான் கம்பெனிகள் விவகாரத் துறை இருக்குது. அதனால அவரோட கைங்கர்யம் இருக்குமோன்னு கொடநாடு வரை சந்தேகம் பரவ, ஜெட்லிகிட்டே ஜெ. வேகமா பேசினாராம். ஜெட்லி தனக்கு இது பற்றி எதுவுமே தெரியாதுன்னு சத்தி யம் பண்ணாத குறையா சொல்ல, மாநில உளவுத் துறை அதிகாரிகள் தங்களோட டெல்லி சோர்ஸ்கள் மூலமா தோண்டியதில், தமிழக கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலமாத்தான் மத்திய அரசு பல ஆவணங்களைத் திரட்டுதுன்னும், மோடி- அமித்ஷா இருவரோட நேரடி உத்தரவில்தான் இதெல்லாம் நடக்குதுன்னும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கணக்குப் போட்டே காய்கள் நகர்த்தப்படுதுன்னும் கொடநாடுக்கு ரிப்போர்ட் போயிருக்குதாம்.''""ஜெ. இன்னும் டென்ஷனாயிடுவாரே?''""தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திடக் கூடாதுன்னு மாநில உளவுத்துறை ரொம்ப சின்சியரா வேலை பார்த்து, இதுவரை பெரிய கட்சிகளை ஒன்றுசேரவிடாமல் தடுத்து வச்சிருக் குது. அதே  நேரத்தில், இந்த சினிமா தியேட்டர் காம்ப்ளக்ஸை சசிகலா-இளவரசி தரப்பு வாங்கிய விவகாரம் சம்பந்தமா கலைஞர், ராமதாஸ், வைகோன்னு தனித்தனி அணியா இருக்கிற தலைவர்கள் விமர்சன அறிக்கை வெளியிட்டி ருக்காங்க. எதிர்க்கட்சிகள் கைக்கு ஒரு ஆயுதத்தை  கொடுத்துட்டதா கொடநாட்டின் மனநிலையாம். இப்படி ஆகிவிடக்கூடாதுன்னு இத்தனை வருசமா ரொம்ப கவனமா போட்ட ப்ளான் இப்ப அம்பல மாயிடிச்சேன்னு கார்டன் தரப்பு மொத்தமும் ஷாக் ஆகியிருக்குது.''


""இத்தனை வருச ப்ளானா?''""1991லிருந்து 96வரை ஜெ. முதன்முறையா ஆட்சியில் இருந்தப்ப வருமானத்துக்கு அதிகமா சொத்துகளை குவிச்சது தொடர்பா போடப்பட்ட வழக்கில் ஜெ.வோடு அதே போயஸ் கார்டன் முகவரியில் இருந்தவங்கதான் சசிகலாவும், அவரோட அண்ணி இளவரசியும். இவங்களோடு மாஜி வளர்ப்பு மகன் சுதாகரனும் வழக்கில் மாட்டி ஸ்பெஷல் கோர்ட்டில் தண்டிக் கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைவாசத்தை அனு பவிச்சி, ஜாமீன் வாங்கி, கர்நாடக ஹைகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டு, இப்ப சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் கேஸை எதிர்கொண்டிருக்காங்க. அதனால சசிகலா, இளவரசி உள்பட பழைய முகங்கள் யாரும் புதுசா எந்த சொத்து விவகாரத்திலும் ஈடு படலை. அவங்க குடும்பத்தைச் சேர்ந்த அடுத்த வாரிசுகளும், சொத்துக் குவிப்பு வழக்கில் சம் பந்தப்பட்ட கம்பெனிகளில் பார்ட் னராக இருந்த நம்பிக்கையான தொழிலதிபர்களும்தான் 2001-2006 அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும், 2011லிருந்து நடந்துக்கிட்டிருக்கிற அ.தி.மு.க ஆட்சியிலும் புதுசு புதுசா சொத்துகளை வாங்கியிருக்காங்க. இதுக்காக புதுப்புது கம்பெனிகள் தொடங்கப்பட்டதோடு, பழைய கம்பெனிகள் பலவும் தொடர்ந்து செயல்பட்டுக்கிட்டிருக்குது.''



""கம்பெனிகளோட டைரக்டர்கள் யார் யாருன்னு மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத்துறை வெப்சைட்டில் பார்த்தால் தெரியுமே?''""அந்த ஆவணத்தைத்தான் பிரபலமான ஆடிட் டர்கள் உதவியோடு தேடிப் பிடிச்சேங்க தலைவரே.. கம்பெனி டைரக்டர்களோட அடையாள எண்ணான உஒச நம்பரோடு விவரம் கிடைச்சுது. மொத்தம் 38 கம்பெனிகள். பழசு, புதுசு, பேர் மாற்றம் செய்யப் பட்டது, டைரக்டர்கள் மாற்றம் நடந்தது இப்படி எல்லா விவரங்களும் கிடைச்சிருக்குது. சசிகலா அண்ணன் சுந்தரவதனத்தோட மகன் டாக்டர் வெங்கடேஷ் பங்குதாரராக உள்ள லிபர்டி ஹைஸ்கேன் நிறுவனத்தை 2007ல் ஜெ.தான் திறந்து வச்சாரு. அ.தி.மு.கவின் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பு மூலமா வெங்கடேஷ் அரசியல் என்ட்ரி கொடுக்கிறதுக்கும் இதுதான் காரணமா இருந்தது. ஜாஸ் சினிமாஸ்னு பெயர் மாற்றமாகியிருக்கும் ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங்கோட டைரக்டர்களில் ஒருவர் சுந்தரவதனம் மகள் பிரபாவோட கணவர்  டாக் டர் சிவக்குமார். இன்னொரு டைரக்டரா இருக்கிறவர் இளவரசியோட மகள் ப்ரியாவின் கணவர் கார்த்தி கேயன். அதாவது, இளவரசியோட மருமகன். மூணா வது டைரக்டர் கார்டன் உதவியாளர் பூங்குன்றன்.''""எல்லோருமே கார்டனோட சம்பந்தப்பட்ட வங்களா இருக்காங்களே!''""இன்னும் இருக்குது கேளுங்க.. மாவிஸ் சாட்காம் பிரைவேட் லிமிடெட்டின் கீழ்தான் ஜெயா டி.வி இயங்குது. இதன் டைரக்டர்களா சசிகலா அண்ணன் சுந்தரவதனத்தோட மகள் பிரபா, மகன் வெங்கடேஷ் இவங்களோடு பூங்குன்றனும் இருக்காரு. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா தன்னோட தீர்ப்பில், சசிகலாவும் இளவரசியும் டைரக்டர்களா இருந்த இந்தோ தோஹா கெமிக்கல் கம்பெனியில் இடம்பெற்றிருந்த ராஜமாணிக்கம், குலோத்துங்கன் இருவரையும் பினாமிகள்னு குறிப் பிட்டிருந்தாரு. இந்த இருவரோடு ராஜமாணிக்கத்தின் மகன் வெங்கடாசலமும் இப்ப 10 கம்பெனிகளுக்கு டைரக்டர்களா இருக்காங்க. இவர்களைப் போலவே டாக்டர் வெங்கடேஷோட மனைவி ஹேமா, இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் இவங்களும் டைரக்டர்களா இருக்காங்க. கலியபெருமாளின் மகனும் இளவரசியின் மருமகனுமான  கார்த்திகேயனும், சசிகலா அண்ணன் சுந்தரவதனம் மகள் பிரபாவோட கணவர் டாக்டர் சிவக்குமாரும் பல கம்பெனிகளில் டைரக்டர்களாக இருக்காங்க. குறிப்பா, சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயா பைனான்ஸ் கம்பெனியின் டைரக் டர்களா இருந்த சசிகலாவுக்கும் சுதாகரனுக்கும் பதில், சிவக்குமாரும் கார்த்திகேயனும் நிய மிக்கப்பட்டிருக்காங்க. பூங்குன்றனும் இதில் ஒரு டைரக்டர். 2002-ல் தொடங்கப்பட்ட ஏ வேர்ல்டு ராக் பிரைவேட் லிமிடெட்டில் கார்னட் அதிபர் வைகுண்ட ராஜனும் டைரக்டரா சேர்க்கப்பட்டிருக்காரு. இவர் டைரக்டரா உள்ள ரிவர்வே அக்ரோ கம்பெனியும் குன்ஹா தீர்ப்பில் பினாமி கம்பெனின்னு குறிப்பிடப்பட்டிருக்குது.''""இந்த கம்பெனிகளோட மதிப்பு என்னவாம்?''""கம்பெனிகளைத் தொடங்கு வதற்காக பிள்ளையார் சுழி போட்ட தொகையே 117 கோடியே 22 லட்சத்து 50ஆயிரம் ரூபாய். 96ல் ஜெ உள்ளிட்ட 4 பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்ட பிறகும் 25 புதிய கம்பெனிகளை இதுநாள் வரைக்கும் தொடங்கியிருக்காங்க. இளவரசி மகன் விவேக்தான் ஜாஸ் உள்ளிட்ட நிறுவனங்களை கவனிக்கிறாராம். 1000 கோடி ஜாஸ் சினிமாஸ் விவகாரத்தைத் தொடர்ந்து மத்ததெல்லாம் வெளியே வந்தா என்னாவது? அதுதான் குளுகுளு கொடநாடே ஹீட் ஆகும் அளவுக்கு டென்ஷனை உண்டாக்கியிருக்குது. இதுபோக இன்னொரு லேட்டஸ்ட் தகவலும் மலையிலிருந்து கசியுதுங்க தலைவரே..''""என்ன தகவல்?''""ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ. பிரச்சாரம் செய்த நாளில், வெளிநாடு ஒன்றில் வைகுண்டராஜனும் சசிகலா சொந்தக்காரர் கிள்ளிவளவன்ங்கிறவரும் டைரக்டர்களா உள்ள நிறுவனம் சார்பில் 22ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமச் சுரங்கம் ஒண்ணு வாங்கப்பட்டி ருக்குது. இதில் அந்த நாட்டு மந்திரி ஒருத்தரும் டைரக்டராம். இப்ப கூடுதலா 500 கோடியிலே ஃபேக்டரி கட்டப்பட்டு, கனிமங்களை ரகவாரியா பிரிக்கும் வேலை நடந்துக்கிட்டிருக்குதாம்.''""போன தி.மு.க ஆட்சியின்போது இதுபோல வெளியான குடும்ப சொத்து விவரங்கள், ஊழல் வழக்குகள் இதையெல் லாம் அ.தி.மு.க தனக்கான ஆயுதமா பயன்படுத்தி, 2011 தேர்தலில் தி.மு.க.வுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காத அளவுக்கு செய்தது. இப்ப அ.தி.மு.க.வோட தலைமைக்கு நெருக்கமான குடும்பத்தினர், அதுவும் போயஸ் கார்டன் அட்ரசில் உள்ள குடும்பத்தினரோட உறவுகள் வாங்கி குவிச்சிருக்கும் சொத்துகளை தேர்தல் களத்து ஆயுதமா பயன்படுத்த தி.மு.க ரெடியாயிடிச்சா?''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக