திங்கள், 23 நவம்பர், 2015

அழகிரி மகன் தயாநிதியின் நண்பர் மதுரையில் கொடூரமாக தாக்கப்பட்டார் !

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான அழகியிரியின் மகன் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பர் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். துரை தயாநிதியின் நண்பர் ராமகிருஷ்ணன் என்ற ராம்கி நேற்று இரவு புதூர் பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த அவர் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோட்டார் வாகனத்தில் வந்த அந்த மர்ம நபர்கள் ஹெல்மட் அணிந்திருந்ததால், அவர்கள் குறித்த அடையாளம் ஏதும் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.< அழகிரியின் வலது கரமாக செயல்பட்ட பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக சில நாள்களுக்கு முன்பு போலீஸார் ராம்கியை அழைத்து விசாரணை நடத்திருந்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நெடுநாள்களாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டியை போலீஸார் மும்பையில் அண்மையில் கைது  செய்தனர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக