திங்கள், 2 நவம்பர், 2015

மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமகவிற்கு இடமில்லை என்ற அறிவிப்புக்கு: ராமதாஸ் நன்றி

மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமகவிற்கு இடமில்லை என அறிவித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட பாமகவின் செயற்குழு கூட்டம் தியாகராயர் நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட ராமதாஸ் வரும் சட்டமன்ற தேர்தலில் செயல்படுத்தவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், சென்னைக்கு மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமக, பாஜக கட்சிகளுக்கு இடமில்லை என திருமாவளவன் பேசியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தமிழகத்தை முன்னேற்ற கூடிய செயல்திட்டம் அன்புமணி கையில் இருப்பதாக ராமதாஸ் கூறினார். மேலும் பாடகர் கோவன் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார் nakkheeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக