செவ்வாய், 3 நவம்பர், 2015

பிரிட்டனுக்கு வரும் மோடிக்கு மிகப்பெரும் எதிர்ப்பு காத்திருக்கிறது..உலக பெண் உரிமையாளர்கள் போர்க்கொடி...

 பிரதமர் மோடி, அடுத்த வாரம் பிரிட்டன் செல்லும்போது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்த, ஹாலிவுட் பெண் இயக்குனர் லெஸ்லி உட்வின்,
ஆட்களை திரட்டும் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர்,லெஸ்லி உட்வின், 58. ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தை இவர் வெளியிட்டார். கடந்த, 2012ல், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியின் பேட்டியும் இந்த படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி, சிறைக்குள், குற்றவாளியிடம் பேட்டி எடுத்ததற்காக, இந்த படத்தை இந்தியாவில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்துள்ளது.  எல்லா சர்வாதிகாரிகளும் யூஸ் பண்ணி தோத்து போன  ஹிட்லரின்   Goebbels  டெக்னிக்கை  மோடி மஸ்தானும் ... 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் 12ல், பிரிட்டனுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, லண்டனில் பிரிட்டன்வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில்
உரையாற்றுகிறார். அவர் பேசும் இடத்தின் அருகே, மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளில், லெஸ்லி உட்வின் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு, சமூக வலை தளங்கள் மூலமாக, லெஸ்லி உட்வின் அனுப்பியுள்ள தகவல்:'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தை திரையிட, இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நம் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு இது தான் சரியான நேரம். வரும், 12ல், மோடி, லண்டனுக்கு வரும்போது, மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டும். மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போஸ்டர், பேனர்களுடன் ஏராளமானோர் திரள வேண்டும். நமக்கு குறுகிய அவகாசமே உள்ளது. அதற்குள் ஏராளமானோரை திரட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக