செவ்வாய், 10 நவம்பர், 2015

BJP க்குள் குத்து வெட்டு...அமித்ஷாவுக்கு எதிராக அத்வானி ஜோஷி போர்க்கொடி! பில்டிங் ஸ்ராங் பேஸ்மென்ட் வீக்... பீகார்

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சி தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் சாந்த குமார் ஆகியோர் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி உள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி பாடம் கற்கவில்லை என்றும் அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படு தோல்வி அடைந்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேச்சுகளையும் அக்கட்சி மூத்த தலைவர்களே கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  இதன் உச்சகட்டமாக பாரதிய ஜனதாவில் ஓரம்கட்டப்பட்ட மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்தகுமார் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில், டெல்லி சட்டசபை தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி தவறிவிட்டது... கடந்த ஓராண்டு காலமாக கட்சி பலவீனமாக இருந்ததே பீகார் தோல்விக்கு காரணம்.. பீகார் தேர்தலுக்குப் பொறுப்பு வகித்தவர்கள் டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி அடைந்தது ஏன் என்பதை ஆராய தவறிவிட்டார்கள் என்றும் அதில் சாடப்பட்டுள்ளது.

Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக