புதன், 25 நவம்பர், 2015

King fisher விஜய மல்லையா 2000 கோடியை முழுங்க ரெடி..இவர் தேவகவுடா கட்சி MP யும் ஆவார்,

முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய 6,900 கோடி ரூபாய் கடனில், அசல் தொகையை மட்டும் தான் செலுத்துவதாக வங்கிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதற்காக விஜய் மல்லையா மற்றும் வங்கி தரப்புகள் மத்தியில் அடுத்தச் சில நாட்களில் முக்கியப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
கடன் தொகை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய அசல் தொகை 4,500-5,000 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கடனுக்கான வட்டி தொகை தோராயமாக 2,000 கோடி ரூபாய் எனவும் வங்கி தரப்பு தெரிவித்துள்ளது. இவரின் அரசியல் பின்புலம்  கொஞ்சம் பாருங்கUnknown month, 2002 – Feb. 2004 and Oct. 2004 – April 2008, Member, Consultative Committee for the Ministry of Defence
  • Sept. 2002 – Feb. 2003, Member, Committee on Science and Technology, Environment and Forests
  • Feb. 2003 – Feb. 2004, Member, Committee on Defence
  • Aug. 2004 – April 2008, Member, Committee on Industry
  • Sept. 2004 – April 2008, Convenor, Sub-Committee-III of the Committee on Industry for the Ministry of Heavy Industries and Public Enterprises
  • Unknown time span, Member, Sub-Committee-IV of the Committee on Industry for Action Taken Report
  • Aug. 2007 – April 2008, Member, Sub-Committee-II for Small Scale Industries of the Committee on Industry
  • Aug. 2010 onwards, Member, Committee on Industry
  • Aug. 2010 onwards, Member, Consultative Committee for the Ministry of Civil Aviation
  • Aug. 2012 onwards, Member, Committee on Chemicals and Fertilizers.
தற்போது விஜய் மல்லையா, தான் அளிக்க வேண்டிய மொத்தக் கடனில், வட்டி தொகை இல்லாமல், அசல் தொகையை மட்டும் செலுத்த தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான குழு, வட்டித் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய முடியாது எனவும் குறைந்த அளவிலான வட்டி தொகையை மட்டுமாவது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா செலுத்த வேண்டும் என வங்கி தரப்புகள் தெரிவித்துள்ளது. மேலும் தங்களுக்கு அசல் தொகையை மட்டும் பெறுவதற்கு உடன்பாடு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நிதியமைச்சகம் இந்த விவகாரம் குறித்துத் தகவல்களைப் பொதுத்துறை வங்கிகள் மத்திய நிதியமைகத்திற்கு உடனக்குடன் தெரிவிக்கும் நிலையில் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
லிமிடெட் கிங்பிஷர் மதுபானத்தைத் தயாரிக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் மீது வாங்கிய கடன் வங்கிகளுக்கு உடனடியாகச் செலுத்தும் பணியிலேயே தற்போது முழுமையாக ஈட்டுப்பட்டுள்ளதாக அவர் பேசினார்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் இந்திய விமானத் துறையில் கொடிகட்டிப் பறந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளாலும், நிதி நெருக்கடியின் காரணமாக முழுமையாக முடிங்கிப்போனது.
மோசடியாளர் என்ற பட்டம்.. வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத விஜய் மல்லையாவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா மோசடியாளர் என்று அறிவித்துள்ளது.

Read more at: http://tamil.goodreturns.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக