ஞாயிறு, 18 அக்டோபர், 2015

சொல்கிறது ஆர்.எஸ்.எஸ் : தாத்ரி படுகொலை சரியானதே..

டெல்லி: பசுக்களை வதம் செய்வோர் பாவிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே தாத்ரியில் நடந்ததும் நியாயமான செயல்தான் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பான்ச்ஜன்யா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லீம் முதியவர் ஒருவரை மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி ஊரே கூடி கொடூரமாக அடித்துக் கொன்றது. இந்த செயல் பெரும் பரபரப்பையும், மக்கள் மனதில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை நியாயப்படுத்தி ஆர்எஸ்எஸ் பத்திரிகை எழுதியிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து பான்ச்ஜன்யாவில் வந்துள்ள கட்டுரையில், பசுக்களைக் கொல்லும் பாவிகளைக் கொல்ல வேண்டும் என்று வேதங்களே சொல்கின்றன.எந்த மதமாக இருந்தாலும் மத அடிப்படை வாதிகள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள் இவனுகளாகட்டும்  அவனுகளாகட்டும் எல்லா மட்டையும் ஒரே குட்டையில் ஊறியவைதான்.
இது நமக்கு வாழ்வா, சாவா போராட்டம் போல. தாத்ரியில் அக்லக் என்ன செய்தார்... பசுவைக் கொன்றார். அவர் செய்தது பாவச் செயல். பசுக்களை வதம் செய்வது இந்துக்களின் கெளரவத்தை சீர்குலைக்கும் செயல். இன்று பசுக்களைக் கொல்லும் முஸ்லீ்ம்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே. சமூக நல்லிணக்கம் முக்கியம்தான். ஆனால் ஒரு மதத்தினரின் நம்பிக்கையை மற்ற மதத்தினர் மதிக்க வேண்டும் என்று அதில் எழுதப்பட்டுள்ளது. வினய் கிருஷ்ணா சதுர்வேதி என்ற இந்தி எழுத்தாளர் துபைல் சதுர்வேதி என்ற பெயரில் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக