வியாழன், 1 அக்டோபர், 2015

கெஜ்ரிவால் :நிதிஷ்குமாருக்கு எனது முழு ஆதரவு

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு எனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார். பீகார் சட்டசபைக்கு 5 கட்ட தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு வரும் 12–ந் தேதி நடக்க உள்ளது. அங்கு தேர்தல்களத்தில் அனல் பறக்கிறது. ஆட்சியை கைப்பற்றுவதில் பாரதீய ஜனதா தீவிரமாக உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் வரிந்துகட்டுகிறது. ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் அது கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் பீகார் முதல் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் பீகார் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனை கெஜ்ரிவால் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஊடங்களால் திரித்து எழுதப்பட்டதாவும் அவர் கூறினார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:


பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு எனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன். அவர் நல்ல மனிதர். மக்கள் அவருக்கு ஓட்டளித்து மீண்டும் முதல்-மந்திரி ஆக்க வேண்டும். மக்கள் அவருக்குத் தான் வாக்களிப்பார்கள்.  கெஜ்ரிவால் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று எனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து செய்தியாக வெளியிட்டுள்ளன என்பதை அவர் சுட்டி காட்டினார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக