செவ்வாய், 13 அக்டோபர், 2015

ஆந்திரா ஆசிரியையின் கொடுரம்.. சிறுநீர்கழித்த 4 வயது சிறுமியை சூடான இரும்பு சறுக்கத்தில்...

ஆந்திராவில் பள்ளியில் சிறுநீர்கழித்த 4 வயது சிறுமியை சூடான இரும்பு சறுக்கத்தில் உட்காரவைத்து ஆசிரியை தண்டனை வழங்கியது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலம் எழுருவில் உள்ள தனியார் பள்ளியில், வகுப்பறைக்குள் தெரியாமல் சிறுநீர்கழித்துவிட்ட சிறுமியை ஆசிரியை கொடூரமான முறையில் தண்டித்து உள்ளார். 4 வயதான சிறுமியை, மதிய வேளையில் சூடாக இருந்த இரும்பு சறுக்கத்தில் உட்காரவைத்து தண்டித்து உள்ளார். சிறுமியை அதிக நேரம் இரும்பு சறுக்கத்தில் இருக்க வைத்ததால் அவரது அந்தரங்க உறுப்பானது மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.  ஆசிரியர் மீது பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர்களின் புகாரை நிர்வாகம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். இதற்கிடையே மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் அஷ்யுட் ராவ் பேசுகையில், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கிஉள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார். முதன்மை கல்வி கூடங்கள் அனைத்தும் வணிக மையமாக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டிஉள்ளார். இந்த சிறிய பிரச்சனையை கூட புரிந்துக் கொள்ளத் தெரியாத இந்த ஆசிரியை, சிறுவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு தகுதியே இல்லாதவர் என்றும் கோபத்துடன் அவர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இச்சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை நடத்திஉள்ளனர். பச்சிளம் குழந்தையை இவ்வாறு கொடூரமான முறையில் தண்டித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக