வியாழன், 15 அக்டோபர், 2015

2ஜி வழக்கு: 3 நிறுவனங்கள் விடுவிப்பு : மற்றும் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் விடுவிப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 நிறுவனங்களையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2ஜி முறைகேடு தொடர்பாக, மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்தத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததன் மூலம், அரசுக்கு ரூ.846.44 கோடி இழப்பை ஏற்படுத்திவிட்டதாக சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் தெரிவித்திருந்தது.
தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய, முன்னாள் செயலர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 தனியார் நிறுவனங்களையும் விடுவித்து நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று உத்தரவிட்டுள்ளார். 2G வழக்கு திமுக மீதான பழிவாங்கும் நடவடிக்கைதான்.அதிலும் ராசாவையும் கனிமொழியையும் குறிவைத்து தாக்குவது நிச்சயமாக உள்நோக்கம் கொண்ட செயல்தான் 

மேலும், முறையான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர்ந்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக