ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஆஸ்கர் தெரிவுக்கு காக்கா முட்டையை அனுப்பாதது ஏன்? அவன் அப்படித்தாய்ன் ...ஹிந்திக்காரந்தாய்ன்.

ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட், காக்கா முட்டை இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று ஒன்றரை நாள் விவாதித்தோம் என தேர்வுக்குழுவில் இடம்பெற்ற இயக்குநரும் நடிகருமான அரிந்தம் சில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு, காக்கா முட்டை, பாகுபலி, பிகே, மசான், மேரி கோம், ஹைதர் உள்பட 30 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. மத்திய அரசின் விருதுகள்  எல்லாமே  வெறும் கேலி கூத்தாகும்,  வெறும் ஹிந்தி  மொழி பிரசார வசனங்களை சேர்த்ததால் மிகவும்  குஷியாகிப்போன  ஹிந்தி  வெறியர்கள்  சம்சாரம்  ஒரு மின்சாரத்திற்கு  கொடுத்தார்கள்.
அவற்றில், புதுமுக இயக்குநர் சைதன்யா தமானே இயக்கியுள்ள கோர்ட் என்ற மராத்தி மொழித் திரைப்படத்தை, பிரபல இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.
வயதான நாட்டுப்புற பாடகர் ஒருவர், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழக்கும் அவலத்தை விவரித்தும், இந்திய அரசியல் சட்டத்தை விமர்சித்தும் பாடல் இயற்றுகிறார். இதனால் அவர் வழக்கை சந்திக்க நேரிடுகிறது. வழக்கை அவர் எதிர்கொள்ளும் விதத்தை மையமாக வைத்து கோர்ட் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற கோர்ட் திரைப்படம், இதுவரை 19 தேசிய, சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, 16 விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில் கோர்ட் தேர்வு மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழுவில் 15 பேர் இருந்தார்கள். அதில் கடைசி ஓட்டுப் பதிவுக்கு முன்பு இயக்குநர் ராகுல் ரவைல் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். பாலேகருடனான கருத்துவேறுபாடு தொடர்பாகவே குழுவிலிருந்து விலகுவதாகக் கூறினார். இப்போது தேர்வுக்குழுவில் இடம்பெற்ற மற்றொரு இயக்குநரும் நடிகருமான அரிந்தம் சில், கோர்ட் படத் தேர்வு தொடர்பாக அதிர்ச்சியான தகவலைத் தந்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆஸ்கர் தேர்வில் இடம்பெற்ற முறைகேடுகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஓட்டெடுப்பில் பல படிகள் இருந்தன. ஒரு இடைநிலை ஓட்டெடுப்பின்போது நான்கு படங்களின் முடிவுகளில் மாற்றம் செய்யப்பட்டன. அவை - மார்கரிட்டா வித் ஏ ஸ்டிரா, காக்கா முட்டை, மசான், கோர்ட். மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது தேர்வுக்குழுத் தலைவர் அமோல் பாலேகர் கொடுத்த முடிவு தவறு எனத் தெரிந்தது. கோர்ட் படத்தை அவர் வெளியேற்ற நினைத்தார். நானும் இயக்குநர் கமலேஷ்வர் முகர்ஜியும் கோர்ட் படத்துக்கு ஆதரவாகப் பேசினோம். அதிலிருந்து நிலைமை மாறியது. எனக்கு காக்கா முட்டை படம் மீது எந்த வெறுப்பும் கிடையாது. கடைசியில், ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட்டா இல்லை காக்கா முட்டையா என ஒன்றரை நாள் விவாதித்தோம். இது மிகவும் கடினமான தேர்வுதான். கடைசியில் நாங்கள் எல்லோரும் ஒருமனதாக கோர்ட் படத்தைத் தேர்வு செய்தோம் என்றார்.
ராகுல் ரவைல் போல அரிந்தம் சில் ராஜினாமா செய்யவில்லை. இதுபற்றி கேட்டதற்கு, நான் ராஜினாமா செய்திருந்தால் கோர்ட் படம் தேர்வாகியிருக்காது. மற்றவர்கள் போல நானும் பதவியில் இருந்து கோர்ட் படத்துக்காக வாதாடினேன். என்று அவர் பதிலளித்துள்ளார் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக