புதன், 30 செப்டம்பர், 2015

மாட்டுக்கறி சாப்பிட்ட சந்தேகத்தில் அடித்துக் கொலை! உபியில் காட்டுமிராண்டிகள் தர்பார்...


வட இந்திய மாநிலமான
உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டிற்குள் சேமித்து வைத்து சாப்பிட்டார் என்கிற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் ஆணின் கொலை தொடர்பில் ஆறுபேரை தாங்கள் கைது செய்திருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தன் வீட்டிற்குள் இருந்த மொஹம்மத் அக்லாக்கை வீட்டிலிருந்து வெளியில் இழுத்து வந்த கும்பல் ஒன்று அவரை கூட்டமாக தாக்கியது. அவரது மகனும் கூட இந்த தாக்குதலில் கடுமையான காயங்களுக்குள்ளானார்.  கொல்லப்பட்ட மொஹம்மத் அக்லாக்கின் குடும்பத்தினர் இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் பசுவை புனிதமானதாக கருதுவதால் பல இந்திய மாநில அரசுகள் பசுவைக் கொல்வதை தடை செய்துள்ளன. இந்தியாவை தற்போது ஆளும் வலதுசாரி இந்துத்துவ கட்சியின் ஆட்சியில் பசுவை கொல்வது, மாட்டுக்கறிவை விற்பது மற்றும் உண்பது ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக