செவ்வாய், 15 செப்டம்பர், 2015

பொய்யிலே வளர்ந்த ஜெயலலிதா நடத்திய கூத்துப் பட்டறைதான் இந்த மாநாடே தவிர

????????????????????????????????????மோடியை விட தமிழ்நாட்டு லேடிதான் சிறந்தவர் என்று நிரூபித்து விட்டார்.   உலகெங்கும் சுற்றி மோடி 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்தார் என்றால் உள்ளுரில் இருந்து கொண்டே, ஜெயலலிதா 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்துள்ளார் என்று மார்தட்டுகிறார்கள் அதிமுக தொண்டர்கள்.   தமிழக்ததின் பிணிகள் அனைத்தையும், இந்த முதலீடுகள் தீர்த்து வைக்கும் என்று நம்பவைக்க முயற்சி செய்கிறார்கள் அதிமுக அடிமைகள்.
எதற்காக இந்த மாநாடு ?   இந்த மாநாட்டால் என்ன பயன் ?
????????????????????????????????????

உலகில் எங்குமே காணப்படாத வண்ணம், ஒரு வினோதமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.  முற்றிலும் செயலிழந்த ஒரு ஆட்சி.   தலைமைச் செயலகத்துக்கு வாரம் ஒரு முறை.  திடீர் திடீர் என்று அமைச்சரவை மாற்றம். அதிகாரிகள் மாற்றம்,  தேங்கிக் கிடக்கும் கோப்புகள்.   முதலமைச்சரை எப்போது சந்திக்கலாம் என்பது அமைச்சர்களுக்கே தெரியாத ஒரு அவல நிலை.  
ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அராஜகம்.   எங்கெங்கு திரும்பினும் துதிபாடிகளின் கூட்டம்.   இப்படிப்பட்ட ஒரு கேவலத்தின் மறு உருவமான இந்த அரசாங்கம்தான், உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று ஒரு கூத்துப் பட்டறையை நடத்தி முடித்திருக்கிறது.
தொழில் அதிபர்களை குத்தாட்டம் காண்பித்து வரவேற்ற ஒரே அரசாக ஜெயலலிதா அரசு மட்டுமே இருக்க முடியும்.   ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அருமையாக கட்டமைத்து, பெங்களுரே கதி என்று இருந்த மென்பொருள் நிறுவனங்களை ஐதராபாத் நோக்கி திரும்ப வைத்தார்.   உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்த்த பல நிறுவனங்கள், ஐதராபாத் மாநிலத்தில் தொழில் தொடங்க முன்வந்தன.   ஆனால், கரகாட்டமும், தப்பாட்டமும், தவில் கச்சேரியும் சாலையோரங்களில் நடந்தால், முதலீட்டாளர்கள் அகமகிழ்வார்கள் என்று ஜெயலலிதா எதை வைத்து முடிவு செய்தார் என்று தெரியவில்லை.    ஒரு இரண்டாம்தர நடிகையாக இருந்ததையே தகுதியாக வைத்து, ஒரு மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தவரிடம் வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும் ?
????????????????????????????????????
ஒரு அரசியல் கட்சியோ, அல்லது ஒரு அரசியல் தலைவரையோ எதிர்த்து போராட்டங்கள் நடத்துவது இயல்பு.  ஆனால், அதே அரசியல் தலைவர் செல்லும் கார்களின் மீது சாணியை வீசுவதும், துடைப்பம் மற்றும் செருப்பை வீசுவதும் ஒரு நாகரீகமான அரசியலா ?  இப்படிப்பட்ட ஒரு அநாகரீகமான அரசியலை நடத்தும் கட்சியின் தலைவியாகத்தான் ஜெயலலிதா இருந்து வருகிறார்.   இப்படி சாணி அடிப்பதும், துடைப்பத்தை வீசுவதும் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.  ஜெயலலிதாவின் கார் செல்லும் வழியெங்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனை பன்றி உருவத்திலும், கழுதை உருவத்திலும் சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.  இந்த போஸ்டர்களையெல்லாம் பார்த்து ரசித்தபடிதான் ஜெயலலிதா, தலைமைச் செயலகம் சென்றார்.     இதையெல்லாம் பார்த்து ரசிக்கிறார் என்றால் ஜெயலலிதாவுக்கு எப்படியொரு வக்கிரமான புத்தி இருக்க வேண்டும் ?    அறுவறுப்பை ஏற்படுத்தும் இப்படியொரு அரசியலில், புளகாங்கிதம் அடைபவர்தான் ஜெயலலிதா.  அப்படிப்பட்ட ஜெயலலிதாவின் அரசு நடத்தும் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில், குத்தாட்டங்கள் நடப்பதில் வியப்பேதும் இல்லை.   இல்லையென்றால், பறக்கும் குதிரை, ஜெயலலிதா காலில் மண்டியிடுவது போன்ற காட்சியைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து சிரிப்பாரா ஜெயலலிதா ?
????????????????????????????????????
ஜெயலலிதா காலில் மண்டியிடும் பறக்கும் குதிரை
ஜெயலலிதா அரசு பதவியேற்ற முதல் நாளில் இருந்து, உட்கட்டமைப்பு வளர்ச்சி, தொழில் துறை, கல்வித் துறை ஆகியவை கடுமையான சுணக்கத்தை கண்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த செய்தியே.   கருணாநிதி கட்டினார் என்ற ஒரே காரணத்துக்காக, ஓமந்தூரார் மாளிகையில் இருந்த தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கினார்.   அண்ணா நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனை என்று அறிவித்தார்.   சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, அம்முயற்சியை தடுத்து நிறுத்தியது.
தொழில் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான ஒரு அடிப்படை உட்கட்டமைப்பாக இருந்தது, மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை.     துறைமுகத்தில் வந்து இறங்கும் பொருட்களை தமிழகம் முழுக்க மற்றும் அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்கள், சென்னை நகரில் நுழையாமலேயே நேரடியாக மதுரவாயல் பைபாஸை சென்றடையும் வண்ணம் பறக்கும் சாலை திட்டம் போடப்பட்டது.  இந்தத் திட்டம் முழுமையடைந்திருந்தால்
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளி வந்து விடும், மீண்டும் முதல்வராகி விடுவோம் என்ற எண்ணத்தில், மே 23 மற்றும் 24 நடப்பதாக இருந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு,   மீண்டும் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.    தள்ளி வைப்பதற்கு தமிழக அரசு சொன்ன காரணத்தை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.
கோடைக் காலம் ஆதலால் வெயில் காரணமாக, மாநாட்டை தள்ளி வைக்கச் சொல்லி பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கை காரணமாக, மாநாடு தள்ளி வைக்கப்பட்டது என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவித்தது.
100 கோடி ரூபாய் செலவில் நடக்க இருந்த இந்த மாநாட்டுக்கு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்காக, சென்னையில் தாஜ் ஹோட்டலில் ஒரு அறிமுக விழாவும், டெல்லி, மும்பை, பூனா, ஐதராபாத், கொல்கத்தா, சேலம் கோவை போன்ற இடங்களில் அதிகாரிகளும், தொழில்துறை அமைச்சரும் கலந்து கொண்ட, அறிமுக விழாக்கள் நடைபெற்றுள்ளன.    முதல் முறை நடந்த அறிமுக விழாவைத் தவிர, வேறு எந்த விழாவிலும், அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 2012ல், தமிழகத்துக்கான தொலைநோக்குத் திட்ட அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 2005-2006ல் 13.95 சதவிகிதமாக இருந்ததாகவும், வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதத்தை 11 சதவிகிதத்துக்கும் கூடுதலாக அடையச் செய்வதே தனது நோக்கம் என்று தெரிவித்தார்.    ஆனால், புள்ளி விபரங்களின்படி, 2010-2011ல் 13.12 சதவிகிதமாக இருந்த தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 2012-2013ல் 4.14 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவும், தொழிற்சங்கத் தலைவருமான ஏ.சவுந்தரராஜன்,  நோக்கியா ஆலை மூடப்பட்டதன் காரணமாக மட்டும் 25 ஆயிரம் பேர் வேலை இழந்திருப்பதாகவும், நோக்கியா போலவே, மற்ற தொழில் நிறுவனங்களும் வேறு மாநிலத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
நோக்கியா தன் தொழிற்சாலையை மூடுவதற்கு முன்னதாகவே, 2013ல் மோட்டரோலா தன் நிறுவனத்தை மூடி விட்டது. லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்களான டெல் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இன்னும் இப்பகுதியில் தொழிலை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றன.  இருப்பினும், சென்னையில் அதன் யூனிட்டை மூடிய ஃபாக்ஸ்கான் நிறுவனம் தங்கள் விரிவாக்கத்தை, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, குஜராத் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி நகரத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
மின்னணு சாதன நிறுவனங்களுக்கு இந்த கதியென்றால், ஆட்டோ மொபைல் தொழில் நிறுவனமும் மந்த கதியில் இருக்கிறது.    சென்னைக்கு அருகே தன் தொழிற்சாலையை அமைத்து இயக்கி வரும் ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம், தனது அடுத்த விரிவாக்கத்துக்கு குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளது.    வாகன தயாரிப்பு நிறுவனங்களான ப்யுஜாட் மற்றும் இசுஸூ நிறுவனங்கள் முறையே, குஜராத்தையும், ஆந்திராவையும் தேர்ந்தெடுத்துள்ளன.
ஹ்யுண்டாய் நிறுவனமும், தனது அடுத்த விரிவாக்கத்துக்கு வேறு மாநிலத்தை தேர்ந்தெடுக்க உள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன.   சென்னை துறைமுகத்தில் உள்ள போக்குவரத்து நெருக்கடியே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

வெளியூர்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், சென்னை நகரைத் தொடாமல், நேரடியாக துறைமுகம் செல்வதற்கு ஏதுவாக, தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி நிறுவனத்தால் 2008ம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2010ல், தமிழக அரசின் அனுமதி மற்றும் சுற்றுச் சூழல் அனுமதி பெற்று சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையே உயர்மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.  2010 அன்று உள்ளபடி, இத்திட்டம் 2013ல் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், மாநில அரசின் பொதுப்பணித் துறை,  இத்திட்டத்துக்கான வரைபடத்தில் கோளாறு இருக்கிறதென்று ஒரு காரணத்தைக் கூறி, இத்திட்டத்தை நிறுத்தியது.    1815 கோடி ரூபாயில் முடிந்திருக்க வேண்டிய திட்டம் இன்று முடியுமா முடியாதா என்ற கேள்வியோடு காத்திருக்கிறது.   மத்திய அரசு நிறுவனமான தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மதுரவாயல் – துறைமுகம் திட்டம் தாமதமானதற்கு நஷ்ட ஈடாக 685 கோடி ரூபாயை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி “நாங்கள் தொடர்ந்து திட்டங்கள் தாமதமாவது குறித்து மாநில அரசிடம் கடிதம் மூலமாகவும், நேரிலும் பேசி வருகிறோம்.  ஆனால் இதனால் எந்தப் பயனும் இல்லை.  மற்ற மாநிலங்களில், மாநில அரசு, திட்டங்களை செயல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒப்பந்தங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில்  அது போன்ற எந்த ஒப்பந்தங்களும் இல்லை.  இந்த தாமதத்தின் காரணமாக, எந்த தனியார் ஒப்பந்ததாரரும், தமிழகத்தில் நெடுஞ்சாலை வேலைகளை எடுப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்” என்றார்.  இணைப்பு
இது போன்ற பல்வேறு காரணங்களால், தமிழகத்தின் உற்பத்தித் துறை, மீள முடியாத சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் முதல்வரையோ, தொழில் துறை அமைச்சரையோ, சந்திக்க முடியாத நிலை நிலவுகிறது.   சந்திக்க முடிந்தாலும், எந்த தொழில் திட்டத்துக்கும் விரைவாக அனுமதி பெற முடிவதில்லை. ஆனால், அண்டை மாநிலமான, ஆந்திராவில், அதன் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்று, சுற்றப்பயண முடிவுல், 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபெயின் கண்ணாடி தொழிற்சாலை, தனது அடுத்த தொழிற்சாலையை அமைக்க ராஜஸ்தான் மாநிலம் பிவாடி மாவட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளது.   2.5 மில்லியன் டன் சிமென்ட் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், ஆந்திர மாவட்டம் கர்நூலை தேர்ந்தெடுத்துள்ளது.
தனியார் கூட்டுறவோடு ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ள 7000 ஏக்கரிலான சிறப்பு பொருளாதார மண்டலம் இது வரை, 6000 கோடி முதலீட்டினை பெற்றுள்ளது. 168 மெட்ரோ ரயில் கோச்சுகளை வழங்க வேண்டிய ஆல்ஸ்தோம் நிறுவனம் கூட, ஸ்ரீசிட்டியைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மின் உற்பத்தி தொழிலில் இறங்க முனைந்த சீன நிறுவனத்தின்  பிரதிநிதி ஒருவர், “தமிழகத்தில் தொழில் தொடங்க நினைப்பவர்கள், அரசு பிரதிநிதிகளை சந்தித்ததும், தொழில் தொடங்கும் எண்ணத்தையே விட்டு விடுகிறார்கள்.  கடந்த ஆட்சியில் இருந்ததை விட, லஞ்சம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அமைச்சர்களும், அவர்கள் பிரதிநிதிகளும், , பத்து சதவிகிதம், இருபது சதவிகிதம் என்று வெளிப்படையாகவே கட்சி நிதி என்று கேட்கிறார்கள்.  இப்படிப்பட் சூழலில், இவ்வளவு சதவிகிதத்தை லஞ்சமாகக் கொடுத்து விட்டு, எப்படி தொழில் தொடங்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
சீன நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து, தமிழகத்தில், எண்ணூர் மற்றும் உடன்குடியில் அமைக்கப்பட இருந்த 1320 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் டெண்டரில் பங்கேற்றன.    எண்ணூரில், சீன நிறுவனத்தின் விலைப்புள்ளிகள் சரியில்லை என்ற காரணத்தைக் கூறி, அதை நிராகரித்தது, மின் வாரியம்.    உடன்குடி டெண்டரில் பங்கேற்ற சீன நிறுவனம், பிஎச்ஈஎல் நிறுவனத்தை விட, குறைவாக விலைப்புள்ளி கோரியிருந்தும், அந்த டெண்டரையே ரத்து செய்தது மின் வாரியம்.   இது தொடர்பாக சீன நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.   அனைத்து வழக்குகளும், நிலுவையில் இருப்பதால், இந்த மின் திட்டங்கள் எப்போது தொடங்கும் என்பதற்கான அறிகுறியே இல்லை.

கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில், தொழில் தொடங்குபவர்களுக்கு உள்ள ஒற்றைச் சாளர முறை போல, தமிழகத்தில் அறிமுகப்படுத்தப் பட்டால், தொழில் நிறுவனங்கள் எளிதாக முதலீடு செய்யும்.  ஆனால், தமிழகத்தில் அப்படிப்பட்ட ஒற்றைச் சாளர முறை, வெறும் காகிதத்தில்தான் இருக்கிறது.
தற்போது படோடாபமாக அறிவிக்கப்பட்டுள்ள கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு என்று கூறப்படும் இந்த 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி என்ற தொகை எப்படி வந்தது என்று கேட்டால் இந்தக் கேலிக்கூத்தை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.    ஜெயலலிதாவின் பிறந்த தினமான 24 பிப்ரவரி என்பதை மனதில் வைத்தே 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி என்ற தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.    இதைப் போன்ற சம்பிரதாயமான நடவடிக்கைகளின் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்பதே ஜெயலலிதாவின் திட்டம்.
பற்றி எரிந்த மதுவிலக்கு பிரச்சினையை ஈவிகேஎஸ் இளங்கோவை வைத்து முடக்கியாயிற்று.   தற்போது எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக தொடர்ந்து சொல்லி வரும் குற்றச்சாட்டு, அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி அறவே கிடையாது என்பதே.    தற்போது இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், வெற்றிகரமாக இதையும் சரிக்கட்டியாகி விட்டது என்ற இறுமாப்பிலேயே ஜெயலலிதா இருக்கிறார்.    2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கான முதலீடு என்று அறிவித்து விட்டால் போதாதா ?    யார் இதை சென்று சரிபார்ப்பது.
மேலும் தமிழக மக்களில் பலருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் என்ன என்பதே இது வரை புரியவில்லை.    புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் மொத்த பணமும் ஒரு சில நாட்களில் தமிழகம் வந்து விடும் என்ற நினைப்பிலேயே இருக்கிறார்கள்.    சாதாரணமாக 20 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கும்போதே நாலு இடத்தில் விசாரிக்கிறோம்.  இதில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஒரு தொழில் அதிபர் இந்த அரசையும் அதன் செயல்பாடுகளையும் பற்றி விசாரிக்க மாட்டாரா என்ன ?  விசாரித்தால், இவர்கள் 10 முதல் 20 சதவிகிதம் பங்கு கேட்பதும், அனுமதி தராமல் இழுத்தடித்த வரலாறும் அவர்களுக்கு தெரியாதா என்ன ?  அதன் காரணமாகத்தான் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் முதலீடு என்று கவனமாக அறிவித்திருக்கிறார்கள்.    அடுத்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருக்க மாட்டார் என்று ஒரு நப்பாசைதான்.    மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி முதலீடுகள் செய்யப்படாவிட்டால், ஒப்பந்தம் போட்ட தொழில் அதிபரை தூக்கிலிட்டு விட முடியாது.    கடந்த நான்காண்டுகளாக, தமிழகத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்பதைப் பார்ப்போம்.
Presentation1
அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடக அரசுகள் இது போல பல முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி ஓய்ந்து போய் விட்டனர்.
மொத்தத்தில் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ஜெயலலிதா நடத்திய கூத்துப் பட்டறைதான் இந்த மாநாடே தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
உரை:
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும். savukkuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக