செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சரத்குமார் Black Mail: நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம்.

சென்னை : உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம் என்றும், இன்னும் 15 நாட்களுக்குள் ரகசியத்தை வெளியிடப்போவதாகவும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் தற்போது தலைவராக இருக்கும் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர். இதற்காக இரண்டு அணிகளும் நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறித்து சரத்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது... விஷால் அணியினர் என் மீது தவறான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தொடர்ந்து தவறான பிரச்சாரங்களை செய்து வந்தால் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டேன். தொடர்ந்து இதுபோன்ற தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டால், 15 நாட்களுக்குள் முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன். நான் உண்மையை பேசினால் விஷால் அணியினருக்கு கஷ்டம். வாழ்க்கை பூரா குப்பைகளை உற்பத்தி செய்த சரத்து தான்  வாங்கிய சூட்கேசுகளை பத்தியும் சொல்வாரா ?
நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது மன வேதனை அளிக்கிறது. நடிகர் சங்க இடத்தில், 2013ல் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டிருந்தால் பல கோடி வருவாய் கிடைத்து நலிந்த கலைஞர்கள் பலன் அடைந்திருப்பார்கள். நடிகர் சங்க தேர்தல் நல்ல முறையில் நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும், நடிகர் சங்க துணைத் தலைவராக சிம்பு போட்டியிடுவதாகவும், நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். இவ்வாறு சரத்குமார் கூறினார்

Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக