வியாழன், 17 செப்டம்பர், 2015

சிலியில் நிலநடுக்கம் 8.3 ரிச்டர் ! சுனாமி 15 அடி உயரத்திற்கு பாய்கிறது!


சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாட்டுக் கடற்கரையோரத்தின் பல பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. பூகம்பம் தாக்கியதையடுத்து பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, கரையோரம் வசித்த பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். பல இடங்களில் சுனாமி அலைகள் பதினைந்து அடி  உயரத்திற்கு எழுந்தனர். இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 8.3ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் சாண்டியாகோவுக்கு வடமேற்கில் 250 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்திற்குப் பிந்தைய பல அதிர்வுகள் அந்தப் பிராந்தியத்தை உலுக்கின. இவையும் ரிக்டர் அளவுகோலில் ஆறுக்கு மேல் பதிவாகின. கொகிம்போ, வால்பரைசோ போன்ற நகரங்களில் தண்ணீர் புகுந்திருக்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. வெளியேற்றப்பட்டவர்கள் உயரமான இடங்களிலேயே இருக்கும்படி அதிபர் மிச்செல் பஷெலெ வலியுறுத்தியுள்ளார்.bbctamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக