புதன், 30 செப்டம்பர், 2015

தமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன்

சென்னை:'தேர்தல் அறிக்கையில் கூறியதை, நிறைவேற்றவில்லை' என, தி.மு.க., குற்றம் சாட்டியது.இதுதொடர்பாக, சட்டசபை யில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - சக்கரபாணி: காவிரியில் தண்ணீர் விட, கர்நாடகா அரசு மறுப்பதை கண்டித்து, டெல்டா விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகா முதல்வர், அனைத்துக் கட்சியினரையும் டில்லி அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து, வறட்சி நிவாரணம் கோரியுள்ளார். தமிழக முதல்வரும், அதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பன்னீர்செல்வம்:
காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சக்கரபாணி: எங்கள் கட்சியை சேர்ந்த, ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரின் தொகுதிகளில், மூன்று ஆண்டுகளாக, தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் நடக்கவில்லை.


அமைச்சர் வேலுமணி: பரிந்துரை செய்ததில், தாமதம் ஏற்பட்டிருக்கலாம். பரிந்துரை செய்த பணிக்கு, இடம் கிடைக்காமல் இருக்கலாம். எந்த திட்டம்; என்ன பணி என கூறினால் நடவடிக்கை
எடுக்கப்படும்.

சக்கரபாணி: ஒவ்வொருவருக்கும், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தீர்கள்; இன்னமும் வழங்கவில்லை. என் தொகுதியில், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு ஒரு முறைதான், குடிநீர் கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு, இலவச பஸ் பாஸ் தரப்படும் என்று கூறினீர்கள்; இன்னும் வழங்கவில்லை. அரசின் கடன்சுமையை குறைத்து, தமிழர்களை தலை நிமிர செய்வோம் என்றீர்கள். ஆனால், கடன், 4 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

அமைச்சர் பன்னீர்செல்வம்: தமிழக அரசு வாங்கியுள்ள கடன், மூலதனத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. மேலும், 4 லட்சம் கோடி கடன் என்பது தவறு. பொதுத் துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து, மொத்தம், 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதுவும், 14வது நிதிக்குழு ஆணையம் நிர்ணயித்த வரையறைக்குள் இருக்கிறது.இவ்வாறு விவாதம் நடந்தது தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக