செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

வங்காளதேசத்தில் இங்கிலாந்து நாட்டவர் கைது! வலைத்தள எழுத்தாளர் கொலை வழக்கில் .....


வங்காளதேசத்தில் இரண்டு முக்கிய வலைத்தள எழுத்தாளர்கள் கொலை தொடர்பாக இங்கிலாந்து நாட்டுக்காரர் உள்ளிட்ட 3 பேரை சிறப்பு பாதுகாப்பு படை இன்று கைது செய்துள்ளது. வங்காளதேசத்தில் நாத்திகம் மற்றும் மதச்சார்பின்மை குறித்து வலைத்தளத்தில் பதிவு செய்யும் எழுத்தாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். இதையடுத்து, அன்சருல்லா பங்களா டீம் என்ற அமைப்புக்கு கடந்த மே மாதம் அரசு தடை விதித்தது. இந்நிலையில், அமெரிக்க வலைத்தள எழுத்தாளர் அவிஜித் ராய் மற்றும் ஆனந்த பிஜோய் தாஸ் கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த அதிரடிப்படை பட்டாலியன் போலீசார் இன்று முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.
டாக்காவில் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட அன்சருல்லா பங்களா டீம் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டோகியூர் ரஹ்மான்(58). இவர் எழுத்தாளர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியவர் என்றும், மற்ற இருவரும் அன்சருல்லா பங்களா டீமில் தீவிர உறுப்பினர்கள் என்றும் அதிரடிப்படை தெரிவித்துள்ளது  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக