வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

இரா.சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவர்? இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக மீண்டும் ஒரு தமிழர் .....

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது. இலங்கையில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க மொத்தம் 113நாடாளுமன்ற உறுப்பினர்க்கள் ஆதரவு தேவை. தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் ஆட்சியமைக்க 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திர கட்சியும் ஆளும் கட்சிகளாகிவிட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியான 16உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயல்பாகவே பிரதான எதிர்க்கட்சியாகிவிடுகிறது. மகிந்தா கட்சியின் எம்பிக்கள் பெரும்பாலோர் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட ரணிலின் காலில் விழுந்துள்ளார்கள்.செஞ்ச வினை கொஞ்சமா?

அதன் தலைவரான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக