சனி, 8 ஆகஸ்ட், 2015

பாஜக - அதிமுக ரகசிய /கள்ள உறவு வெளிச்சத்துக்கு வந்தது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

பாஜக - அதிமுகவுக்கு இடையே இருந்த ரகசிய தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டியில், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்தது என கடந்த இரு மாதங்களாக சொல்லி வந்தேன். தற்போது சென்னை வந்த மோடி, ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து வந்திருப்பது இந்த உறவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியும் இரண்டொரு நாட்களில் மதுவிலக்கு கோரும் போராட்டத்தை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.dinamani.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக