செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

சசிபெருமாள் சமாதி அருகே குடும்பத்தினர் திடீர் உண்ணாவிரதம்... மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல்

சேலம்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சசிபெருமாள் குடும்பத்தினர் அவரது சமாதி அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி, செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியபோது சசிபெருமாள் மரணம் அடைந்தார்.  அவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது உடலை பெற்றுக்கொள்ளாமல் குடும்பத்தினர் 7 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பிறகு ம.தி.மு.க.,தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் தமீம் அன்சாரி ஆகியோர் சசிபெருமாள் குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டதையடுத்து, தங்களது உண்ணாவிரதத்தையும் கைவிட்டு, சசிபெருமாள் உடலை பெற்று இளம்பிள்ளை இ.மேட்டுக்காட்டில் உள்ள அவரது வீட்டின் அருகே அடக்கம் செய்தனர். இந்நிலையில், இன்று தமிழக சட்டசபை கூடிய சூழ்நிலையில், சசிபெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகில் சசிபெருமாளின் மூத்த மகன் விவேக், தாய் மகிழம், சகோதரர் நவநீதன், தங்கை கவியரசி மற்றும் உறவினர்களுடன் திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டனர். உண்ணாவிரதம் குறித்து பேசிய சசிபெருமாளின் மூத்த மகன் விவேக், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று போரா உயிர் துறந்த தனது தந்தையின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினா

Read more at://tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக