செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

சீன பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!

சீனாவில் கடந்த சில தினங்களாக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 2007ம் ஆண்டுக்குப் பிறகு அதிக இழப்பாக, ஷாங்காய் பங்குகள் நேற்று 8.49 சதவீதம் சரிவடைந்தன. இன்றும் 7.63 சதவீதம் சரிவடைந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். சீனாவின் மிகப்பெரிய பணக்காரரும், சொத்து மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான டாலியன் வாண்டா நிறுவன உரிமையாளருமான வாங் ஜியான்லினுக்கு நேற்று மட்டும் 3.6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இது அவரது சொத்து மதிப்பில் 10 சதவீதத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. நேற்றைய வர்த்தகத்தில் அவரது நிறுவனம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதேசமயம், அவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டு 6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரரும், இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜேக் மா என்பவருக்கு நேற்று 545 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது மாலைமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக