ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

இளங்கோவன்: கருத்து கணிப்புகள் நம்பும் படியாக இல்லை!

நீதிமன்ற உத்தரவுப்படி 4–வது நாளான இன்று தல்லா குளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட காரில் வந்த இளங்கோவனை திரளான காங்கிரசார் மோட்டார் சைக்கிள் புடைசூழ அழைத்து வந்தனர். கையெழுத்திட்டு விட்டு திரும்பிய இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்பில் முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை. இந்த கருத்துகணிப்பு சிலரது தூண்டுதலின்பேரில் எடுக்கப்பட்டதாகும். இது நம்பும்படியாக இல்லை. மேலும் இது சரியாகவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஊழல் வழக்குகளை கார்த்தி சிதம்பரம் சந்தித்தே ஆக வேண்டும். அதில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. என் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக நான் டெல்லி சென்று சோனியாவை சந்தித்ததாக கூறுவது தவறு. நான் அதற்காக டெல்லி செல்லவில்லை.
நான் ராகுல் உள்ளிட்ட தலைவர்களிடம் போனிலேயே பேசிக்கொள்வேன். என்னை எதிர்க்கிற காங்கிரஸ் தலைவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் தொண்டரோடு தொண்டராக இருக்கவே விரும்புகிறேன்’’என்று கூறினா nakkheeran.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக