புதன், 19 ஆகஸ்ட், 2015

சிரிய அகதிகளில் கிறிஸ்தவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்: ஸ்லவாக்கியா

சிரிய அகதிகளில் கிறிஸ்தவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்போவதாக ஐரோப்பிய நாடான ஸ்லவாக்கியா தெரிவித்துள்ளது. சமூக ஒருங்கிணைப்பை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஸ்லவாக்கியா தெரிவித்துள்ளது. துருக்கி, இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளில் உள்ள சிரிய அகதிகளின் முகாம்களில் இருந்து, இரு நூறு கிறிஸ்த அகதிகளைத் தேர்வுசெய்து, தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக அந்நாட்டு உள்துறைஅமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இவான் மெடிக் தெரிவித்துள்ளார்.
ஸ்லவாக்கியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இஸ்லாமிய சமூகத்தினர் வாழ்கின்றனர் என்றும் இது ஒரு பாரபட்சமான நடவடிக்கை இல்லையென்றும் அவர் கூறியிருக்கிறார். சமூக ஒருங்கிணைப்பை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இவான் மெடிக் கூறியுள்ளார் bbc.tami..com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக