சனி, 22 ஆகஸ்ட், 2015

தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் உள்நோக்கத்தோடு என் மீது வழக்குப் பதிவு ஆ.ராசா குற்றசாட்டு

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்குபதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவரது வீடு மற்றும் உறவினர் வீடு,அலுவலகங்கள் என 20 இடங்களில் அதிரடை சோதனை நடைபெற்றது.இதில் தங்கம்  மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித் தனர். இந்த சோதனை குறித்து சென்னை அண்ணா அறிவா லயத்தில் ஆ.ராசா இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:_ ஏற்கனவே என்மீது தொடுக் கப்ட்ட 2 ஜி வழக்கில், உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலின் பேரில் எனது சொத்துக்களை மதிப்பிட வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிபு, சி.பி.ஐ. ஆகிய 3 துறை அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இதன்படி இவர்கள் ஆய்வு செய்ததில் வருமானத்துக்கு அதிகமாக நான் சொத்து சேர்க்கவில்லை என்று தெரியவந்தது. இதனால் டெல்லி சி.பி.ஐ. கோர்ட் டில் அப்போதே என்னிடம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் இல்லை  என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் கூறினார்கள்.


ஆனால் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகளின் கூற்றுக்கு மாறாக சென்னை சி.பி.ஐ அதிகாரிகள் இப்போது திடீரென என் வீட்டில் சோதனை நடத்தி உள்ள னர். இது உள்நோக்கம் கொண்டது
சென்னையில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகள் வேண்டும் என்றே தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் உள்நோக்கத்தோடு என்மீது வழக்குப் பதிவு செய்து எனது வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர். தேர்தல் நேரத்தில் முகாந்திரம் இல்லாமல் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது

டெல்லி சி.பி.ஐ அதிகாரி கள் கூற்றுக்கு மாறாக சென்னை சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதன் மூலம் இவர்களுக்கிடையே கருத்து முரண்பாடு மோதல் உள்ளதாகவே தெரிகிறது.இது தொடர்பாக நான் சென்னை சி.பி.ஐ போலீஸ் சூப்பிரண்டுக்கு ஒரு விளக்க கடிதம் எழுதி உள்ளேன். என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன் dailythanthi.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக