சனி, 29 ஆகஸ்ட், 2015

நடிகர் மாதவன் மீது நில ஆக்கிரமிப்பு புகார்! திண்டுக்கல் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம்,.......

 வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது விவசாயிகள் புகார்! திண்டுக்கல்: 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் டி.என். ஹரிஹரன் தலைமை வகித்தார். இதில் பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் மகாலட்சுமி, கணேசன் ஆகியோர் பேசுகையில், "பழநி அருகே உள்ள விலாங்கோம்பை தேக்கன் தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது. கொடைக்கானல் மலையில் இருந்து பழநி கண்மாய்களுக்கு இந்த வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரால், தேக்கன் தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இப்பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் மாதவன் வாங்கினார். அதன் பிறகு மாதவன் தரப்பினர் 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து மின்வேலி அமைத்துள்ளனர்.  இந்த ரங்கநாதன் சரோஜாவின் மேட்டுக்குடி மகன்/நடிகன் பேசுவது சதா தத்துவம்! செய்வது பக்கா பார்ப்பனதனம்!இவரு தம்பி படத்தில புரட்சி பத்தி அந்த முழக்கு முழக்குவார்...  

 மேலும் அப்பகுதியில் விளைபொருள்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த களம், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். வருவாய்த் துறை அலுவலர்கள் சிலர் நடிகர் மாதவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். மேலும் எங்கள் நிலங்களையும் விற்கச் சொல்லி மறைமுகமாக நெருக்கடி கொடுக்கின்றனர். பாசன வாய்க்காலை அழித்ததோடு, நடைபாதை, புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்த நடிகர் மாதவன் மீதும், துணை போகும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். விவசாயிகளின் இந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்த வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக