ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இணையதள வசதி இல்லாததால் கிராமத்தை புறக்கணிக்கும் மாணவ–மாணவிகள்! ஸ்மார்ட் போன்’கள் இ–மெயில், பேஸ்புக், டுவிட்டர் வாட்ஸ் அப் ....

இணையதள வசதி இல்லாததால் மாணவர்கள் தங்களின் சொந்த கிராமங்களை புறக்கணித்து வரும் வினோதம் கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய இடத்தை இணையதளம் பிடித்துள்ளது என்றால் மிகையாகாது. இணையதளம் இல்லையென்றால் தற்போது அனைத்து அலுவலக பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இணையதள மோகம் பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் ‘ஸ்மார்ட் போன்’கள் மூலம் தினந்தோறும் இணையதளம் வழியாக சமூக வலைதளங்களான இ–மெயில், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றுடன் வாட்ஸ் அப் உள்பட பலவற்றை பயன்படுத்தி தங்களின் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கலந்துரையாடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க கர்நாடகத்தில் குறிப்பாக துமகூருவில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ–மாணவிகள் சிலர் தங்களின் கிராமங்களுக்கு செல்லாமல் புறக்கணித்து வருகிறார்கள். இதற்கான காரணங்களை மாணவர்களிடம் கேட்டபோது அவர்களின் பதில்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.


அதாவது ‘எங்களின் கிராமங்களில் இணையதள சேவை மிக மெதுவாக உள்ளது. இதனால் நாங்கள் எங்களின் நண்பர்களை இணையதளத்தின் வழியாக தொடர்பு கொள்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக நாங்கள் தற்போது கல்லூரி விடுமுறை நாட்களிலும் கூட எங்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல விரும்புவது இல்லை. இந்த வேளைகளில் நாங்கள் கல்லூரி விடுதிகளிலேயே தங்கி இணையதள வசதியையும், கல்லூரி வளாகத்தில் உள்ள வை–பை வசதியை பயன்படுத்தி வருகிறோம்’ என அவர்கள் தெரிவிக்கிறார்கள்dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக