செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி

துபாய்: ''துபாயில், குட்டி இந்தியாவை நான் காண்கிறேன்,'' என்று, நேற்றிரவு அந்நாட்டில், 50 ஆயிரம் பேர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பெருமிதத்துடன் தெரிவித்தார். துபாய், கிரிக்கெட் மைதானத்தில், யு.ஏ.இ.,யில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென, வளைகுடா நாடுகளில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு திரண்டிருந்தனர்.நிகழ்ச்சியில், 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்துடன் மோடி பேச்சை துவங்கினார். தொடர்ந்து மோடி பேசியதாவது:துபாயில் நான் குட்டி இந்தியாவை பார்க்கிறேன்.

இங்கு வசிக்கும் நீங்கள் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளீர்கள். எனது தேர்தல் வெற்றி, துபாயில் கொண்டாடப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.துபாயில், ஏராளமான கேரள மாநிலத்தவர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் இங்கு வசிக்க வருகின்றனர். அணு ஆயுத சோதனைக்கு பின்னர் பொருளாதார தடை விதிக்கப்பட்டபோது, வாஜ்பாய் உதவி கோரினார். அப்போது அபுதாபி, துபாய் பயணம் நல்லது செய்ய வேண்டும் என தூண்டியது.
இங்கு வந்த என்னை பட்டத்து இளவரசர் அளித்த வரவேற்பு மற்றும் அன்பை மறக்க மாட்டேன். இது, 125 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை.

பயங்கரவாதம் மற்றும் வெறுப்பு சூழ்ந்துள்ள நிலையில், அபுதாபியில் கோவில் கட்ட யு. ஏ.இ., அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இதற்காக நாம் பட்டத்து இளவரசரை பாராட்ட வேண்டும். இந்தியா மற்றும் யு..ஏ.இ., நாடுகளால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை பயங்கரவாதத்திற்கு எதிராக தெளிவான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்குவதற்கு யு.ஏ.இ., ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்வாறு, மோடி பேசினார். தினமலர்..com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக