சனி, 8 ஆகஸ்ட், 2015

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 40 தொகுதிகள்? மோடி- ஜெ. பேச்சில் உடன்பாடு?

தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 40 தொகுதிகளை ஒதுக்க அண்ணா தி.மு.க. ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக தமிழக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளுமே வெளியேறிவிட்டன

இதனால் பாரதிய ஜனதாவுக்கு புகலிடமாக இருப்பது அண்ணா தி.மு.க. மட்டுமே.. அதுவும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் மனு என்கிற கத்திதான் பாரதிய ஜனதா கையிலெடுத்திருக்கும் ஆயுதமாக பார்க்கப்படுகிறது. அண்ணா தி.மு.க. தனித்தே நின்று லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளை வேட்டையாடியதுதான்.. ஆனால் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியால் பா.ஜ.க.வுடன் கூட்டணிசேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அண்ணா தி.மு.க.
முதலில் 100 தொகுதிகள்.. தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் என்னதான் ஆளும் அ.தி.மு.க. அரசை விமர்சித்தாலும் மத்திய அரசோ ஜெயலலிதாவுடன் மிக பெருக்கம் பாராட்டி வருகிறது... கடந்த சில மாதங்களாகவே டெல்லியில் பாரதிய ஜனதா - அண்ணா தி.மு.க. இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன
அண்ணா தி.மு.க.விடம் 100க்கும் அதிகமான தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கேட்டு வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு கொடுத்த மரியாதையும் தொகுதியும் கொடுக்கப்படும் என்பதுதான் அண்ணா தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடாக இருந்து வந்தது
இதன் இறுதிக்கட்டமாகத்தான் சென்னையில் நேற்று பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திவிட்ட்டு இந்த கூட்டணிக்கு மூளையாக இருந்த பத்திரிகையாளர் சோவையும் சந்தித்து நன்றி தெரிவித்தார் என்கிறது பாரதிய ஜனதா வட்டாரங்கள்.. முதலில் 100 தொகுதிகளை குறி வைத்து பேச்சுவார்த்தையை நடத்திய பாரதிய ஜனதா கட்சி 60 தொகுதிகள் வேண்டும்
அண்ணா தி.மு.க. என்கிற பெரிய ஆலமரத்தின் நிழலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டால் குறைந்தது 20 எம்.எல்.ஏக்கள் கிடைத்துவிடுவார்கள் என்ற மனப்பாலுடன் தற்போது பாரதிய ஜனதாவும் ஒப்புக் கொண்டிருக்கிறதாம்.. இந்த இறுதி உடன்பாடுதான் நேற்று பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பால் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்

Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக