சனி, 22 ஆகஸ்ட், 2015

இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. காமராஜர் அரங்க முன்னாள் ஊழியர் வளர்மதி என்பவர் அளித்த புகாரி்ன் பேரில், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை சேர்ந்த மேலாளர் நாராயணன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் அறக்கட்டளையி்ல் டெலிபோன் ஆபரேட்டராக பணி புரிந்தவர் வளர்மதி. இவர், அறக்கட்டளையி்ல் நடைபெற்ற ஊழலை தட்டி கேட்டதால் அடித்து, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக