கடந்த ஆண்டு காணாமல்போன மலேசிய
விமானம் எம் எச் 370 விமானத்தின் ஒரு பகுதியே இப்போது இந்தியப்
பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவுப் பகுதியில் ஒதுங்கியுள்ளது என்பதை
மலேசியா இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் பிரான்ஸுக்கு சோதனைக்காக அனுப்பப்படுகிறது
மலேசியவின் போக்குவரத்து
அமைச்சர் லியோவ் டியாங் லாய், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காணாமல் போன
விமானத்தின் இறக்கைப் பகுதியிலிருக்கும் வர்ணத்தின் நிறம், எம் எச் 370
விமானத்தின் ஆவணங்களுடன் ஒத்துப் போகிறது என்று கூறியுள்ளார்.
காணமல் போன போயிங் 777 ரக விமானத்தின் சிதிலங்கள் என்று நம்பப்படும் வேறு சில பகுதிகளும் இப்போது மேலதிக ஆய்வுக்காக பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரீயூனியன் கடலோரத்த்தின் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம் லேசிய போக்குவரத்து அமைச்சர், அரசு தரப்பு கருத்துக்களை முன்வைத்தாலும், காணாமல் போன விமானத்தில் பயணித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசு தங்களிடம் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்வதில்லை என கோபத்தோடு கூறுகிறார்கள்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ யும் குரல் கொடுத்துள்ளார்.
உறவினர்களுக்கு உடனுக்குடன் தகவல்களை தருவது மலேசியாவின் கடமை என்றும், அதை அவர்கள் செய்ய வேண்டும் என தாங்கள் அறிவுரை விடுப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். தேடுதல் நடவடிக்கையில் தன்னார்வ அமைப்பினர் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர் >இதேவேளை ரீயூனியன் பகுதியில் கரையொதுங்கியுள்ள மேலும் சில விமானப் பகுதிகள் பரிசோதனைகளுக்காக பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன bbc.com/tamil/

Nice news Blog .....Latest Tamil News...
பதிலளிநீக்கு