செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

25 காங்கிரஸ் எம்.பி க்கள் இடைநிறுத்தம்! மூன்று ஊழல் முதல்வர்களும் பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை

புதுடில்லி: லோக்சபாவில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, சபை நடவடிக்கைகளில் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்திய, காங்கிரஸ் எம்.பி.,க்களில், 25 பேர் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்களை, ஐந்து நாட்களுக்கு சபை நடவடிக்கையில் பங்கேற்க, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தடை விதித்தார்.காங்., தலைமையில், அந்தகட்சி மற்றும் அதன் தோழமை கட்சிகளின் எம்.பி.,க்கள் ரகளையால், ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, லோக்சபாவில் குறிப்பிடத்தக்க வகையில், எந்த அலுவலும் நடைபெறவில்லை. அந்த முட்டுக்கட்டையை போக்கும் வகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டங்களிலும், அமைதிக்கான வழி காணப்பட முடியாத வகையில், காங்., திடமாக இருந்தது.நிபந்தனை: 'சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரும், மூன்று, பா.ஜ., முதல்வர்களும் பதவி விலகினால் தான், சபையை சுமுகமாக நடத்த அனுமதிப்போம்' என, காங்., தலைவர் சோனியா அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று காலை மீண்டும் லோக்சபா கூடியபோது, முந்தைய நாட்களை விட, அதிக ஆவேசமாக, காங்., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பதாகைகளை ஏந்தியும், தொடர் கோஷங்கள் எழுப்பியும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும், ரகளையில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரசின் மொத்தமுள்ள, 44 எம்.பி.,க் களில், 25 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, ''ஐந்து நாட்களுக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது,'' என்றார். நடப்பு லோக்சபாவில், எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதன்முறை. இதையடுத்து, காங்., -எம்.பி.,க்களின் அமளி, மேலும் அதிகரித்தது. உடனே சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்த சபாநாயகர், தன் இருக்கையை விட்டு எழுந்து சென்றார்.<ஆலோசனை:
அதன்பின், காங்., - எம்.பி.,க்கள் தங்கள் அமளியை கைவிடாமல், தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிய படி இருந்தனர். அக்கட்சித் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கட்சியின்
மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.ஐந்து நாட்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட காங்., - எம்.பி.,க்கள், 25 பேரும், சபையில் கீழே அமர்ந்து, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.>அமளியில் ஈடுபடகாரணம் இது தான்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த மாதம் 21ல் கூடியது. அதற்கு முந்தைய, பட்ஜெட் கூட்டத் தொடரின் பெரும்பாலான நாட்கள், நில மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., தலைமையில், எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள், சபையில் நடத்திய அமளியால், செயலிழந்து போயின.நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில், காங்., மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு, மற்றொரு விவகாரம் கிடைத்து விட்டது.அதாவது,பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர், ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடிக்கு உதவி செய்ததாகவும், வர்த்தக தொடர்பு வைத்துள்ளதாகவும் கூறி, அவர்கள் இருவரையும் பதவியிலிருந்து பிரதமர் மோடி விலக்க நெருக்கடி கொடுத்தன.அதுபோல, ம.பி., மாநிலத்தில், 'வியாபம்' எனப்படும், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வலியுறுத்தியும், காங்., தலைமையில், எம்.பி.,க்கள் கடும் அமளியில்ஈடுபட்டு வந்தனர். இதனால், லோக்சபாவில் எந்த அலுவலும் மேற்கொள்ள முடியாமல் போனது.<9 b=""> லோக்சபாவில், காங்கிரசுடன் இணைந்து, அமளியில் ஈடுபட்டு வரும், அதன் தோழமை மற்றும் பா.ஜ., எதிர்ப்பு கட்சிகளான, மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.பி., முஸ்லிம் லீக், லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம், சரத் யாதவின் ஐக்கிய ஜனதாதளம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகள், சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து நாட்களுக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்க போவதில்லை என, அறிவித்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக