திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சிரியாவின் 2000 ஆண்டு பழங்கால கோவில் "வெடிவைத்து தகர்ப்பு"

சிரியாவின் முக்கிய கலாச்சார பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படும் பழம்பெரும் நகரமான பல்மைராவில் உள்ள பால் ஷமின் பழங்காலக் கோவிலை இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் வெடிகள் வைத்து தகர்த்து அழித்துவிட்டதாக சிரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தைச் சுற்றி வெடிப்பொருட்களை வைத்த ஜிகாதிகள், அதனை வெடிக்கச் செய்ததாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கின் தொல்லியல்
பெருமைகளில் பல்மைரா நகரம் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது மத்திய கிழக்கில் உள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் இடங்களில் பல்மைரா நகரமும் ஒன்று. பல்மைரா நகரிலுள்ள பண்டைய இடிபாடுகளைப் பராமரிப்பதில் தனது வாழ்க்கையை அர்பணித்திருந்த எண்பத்தியிரண்டு வயது தொல்பொருள் ஆய்வாளரான காலித் அல் அசாதை, ஆயுததாரிகள் கடந்த வாரம் தலையை வெட்டி கொலைச் செய்திருந்தனர். இந்த பழம்பெரும் பொக்கிஷங்களை காத்து வந்த தொல்லியலாளர் காலித் அல் அசாத் கடந்தவாரம் கழுத்தறுத்து கொல்லப்பட்டார்
இது போன்ற சன்னதிகள் மற்றும் கடவுளர் சிலைகள் இருப்பது, இஸ்லாத்தை தவிர வேறொரு சமயம்/தெய்வம் இருப்பதைக் குறிப்புணர்த்துவதாகவும், அதனால் அவை தொடர்ந்து இருப்பது இஸ்லாமிய மதநிந்தனையாகவும் இஸ்லாமிய அரசு குழு கருதுகிறது. பல்மைரா என்பது பாலைவனத்தின் பசுஞ்சோலையை ஒட்டி அமைந்திருக்கும் பழம்பெரும் நகரம்  bbc.com/tami

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக