புதன், 22 ஜூலை, 2015

கறுப்பு இன பெண் சந்திரா கைதான பின் மரணம் ! வீடியோ வெளியானது


டெக்ஸாஸில் இறந்த கறுப்பு இன பெண்ணின் மரணம் குறித்து புலனாய்வு செய்யும் அமெரிக்க பொலிஸ் விசாரணையாளர்கள், அவர் கைது செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். வீதியில் ஒரு வரிசையில் இருந்து அடுத்த வரிசைக்கு மாறும் போது சமிக்ஞை செய்ய தவறினார் என்பதற்காக சண்டிரா பிளண்ட் என்னும் போலிஸாரால் நிறுத்தப்பட்டதை போலிஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த கமெரா காட்டுகின்றது. தன்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்று அவர் திரும்பத் திரும்ப கேட்டதை அடுத்து அங்கு போலிஸ் அதிகாரியுடனான வாக்குவாதம் திடீரென அதிகரித்தது. பின்னர் இருவரும் கமெராவில் தெரியாத பகுதிக்கு நகர்ந்தனர். ஆனால், பின்னர் அவர்களது வாய்த்தர்க்கம், தள்ளுமுள்ளாக மாறியது கமெராவின் ஒலிப்பதிவில் கேட்கிறது. ஒளிப்பதிவில் உள்ள பல தொடர்ச்சியற்ற இடைவெளிகள் அந்த வீடியோ எடிட் பண்ணப்பட்டுள்ளதை காண்பிக்கிறது. சிறையில் மூன்று நாட்களின் பின்னர் பிளண்ட் அவர்கள் தானே தூக்கிட்டு இறந்ததாக மரண விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினர் ஒரு சுயாதீன விசாரணை கோரியுள்ளனர். இது குறித்த காணொளி. இதில் ஒலிக்குறிப்பு கிடையாது

டெக்ஸாஸில் இறந்த கறுப்பு இன பெண்ணின் மரணம் குறித்து புலனாய்வு செய்யும் அமெரிக்க பொலிஸ் விசாரணையாளர்கள், அவர் கைது செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

வீதியில் ஒரு வரிசையில் இருந்து அடுத்த வரிசைக்கு மாறும் போது சமிக்ஞை செய்ய தவறினார் என்பதற்காக சண்டிரா பிளண்ட் என்னும் போலிஸாரால் நிறுத்தப்பட்டதை போலிஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த கமெரா காட்டுகின்றது.
தன்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்று அவர் திரும்பத் திரும்ப கேட்டதை அடுத்து அங்கு போலிஸ் அதிகாரியுடனான வாக்குவாதம் திடீரென அதிகரித்தது.
பின்னர் இருவரும் கமெராவில் தெரியாத பகுதிக்கு நகர்ந்தனர். ஆனால், பின்னர் அவர்களது வாய்த்தர்க்கம், தள்ளுமுள்ளாக மாறியது கமெராவின் ஒலிப்பதிவில் கேட்கிறது.
ஒளிப்பதிவில் உள்ள பல தொடர்ச்சியற்ற இடைவெளிகள் அந்த வீடியோ எடிட் பண்ணப்பட்டுள்ளதை காண்பிக்கிறது.
சிறையில் மூன்று நாட்களின் பின்னர் பிளண்ட் அவர்கள் தானே தூக்கிட்டு இறந்ததாக மரண விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினர் ஒரு சுயாதீன விசாரணை கோரியுள்ளனர்.
இது குறித்த காணொளி. இதில் ஒலிக்குறிப்பு கிடையாது .bbc.com/tamil/global/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக