செவ்வாய், 21 ஜூலை, 2015

தூக்கத்தில் நடந்து சென்று பியானோ வாசிக்கும் சிறுமி


நியூசிலாந்தைச் சேர்ந்த கிவி இஸபெல்(12) தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ள சிறுமி. பொதுவாக, இந்த பிரச்சனை உள்ளவர்கள் இரவில் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இந்நிலையில், ஏற்கனவே இந்த சிறுமி தூக்கத்தில் நடக்கும்போது ஒரு பிரபல பாடலைப் பாடி அவள் குடும்பத்தை அசத்தியுள்ளார். இதை அறியாத அவள் மறுநாள் குடும்பத்தினரிடம், ‘நான் ஒரு பெரிய மேடையில் பாடல் பாடுவதாக கனவு கண்டேன்’ என கூறியுள்ளார். கிவி சமீபகாலமாக பியானோ வகுப்புக்கு சென்று வருகிறார். இதையடுத்து, கனவில் வாசிப்பதாக எண்ணி இவர் பியானோவின் மீது சாய்ந்து குரட்டைவிட்டுக் கொண்டே அருமையாக பியானோ வாசித்துள்ளார். இதை கிவியின் குடும்பத்தினர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவள் கனவென நினைத்து பியானோ வாசிப்பதை, தூங்காமல் இருக்கும்போது வாசிக்க வேண்டும் என்பதுதான் அவளது குடும்பத்தினரின் ஆசை.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக