வெள்ளி, 24 ஜூலை, 2015

ராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீசாருக்கு ஐகோர்ட் இறுதி கெடு!

திருச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராமஜெயம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் கிளை இறுதி கெடு விதித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சியில் அதிகாலை நடைப்பயணம் செய்த ராமஜெயம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாததால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.போலீசு பம்முற பம்மல்ல இருந்து இன்னா தெரியுது ?
இந்த மனு நீதிபதி நாகமுத்து முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி எஸ்.பி. அன்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்தார். அதனை படித்து பார்த்த நீதிபதி, ஒவ்வொரு முறையில் இதே அறிக்கைத்தான் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றார். அப்போது அரசு தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. அதற்கு நீதிபதி, இதுவே இறுதி வாய்ப்பு என குறிப்பிட்டார். மேலும், குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் சிபிசிபிஐடி போலீசாருக்கு 3 மாதம் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாகவும், அப்போது சிபிசிஐடி எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக