வெள்ளி, 24 ஜூலை, 2015

ஐட்டம் சாங் அரசி இனி சின்மயிதாய்ன்

மேரா நாம் மேரி’ பாட்டுதான் இப்போது இந்தி
சினிமாவின் ஹாட்டஸ்ட் ஹிட்டு. அக்‌ஷய்குமார் நடிப்பில் வரும் ஆகஸ்ட் பதினைந்துக்கு ரிலீஸ் ஆகப்போகும் ‘பிரதர்ஸ்’ படத்தின் டீசராக இந்த பாட்டு இணையத்தில் வெளியாகி, முதல் ஐந்து நாட்களிலேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.கரீனாவின் காட்டுத்தனமான இளமைக்கு வலு சேர்க்கிறது நம்மூர் சின்மயியின் போதைக் குரல். பதினைந்து ஆண்டுகளாகப் பாடிவரும் சின்மயிக்கு இதுதான் முதல் ஐட்டம் சாங். முதல் போட்டியிலேயே டபுள் செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேனைப் போல, மகத்தான வெற்றியை எட்டியிருக்கிறார். இதுவரை இந்தியில் எத்தனையோ பாடல்களை அவர் பாடியிருந்தாலும், இந்த பாட்டு பெற்றிருக்கும் அதிரிபுதிரி ஹிட் அவரை எங்கோ கொண்டு போகப்போகிறது. ஐட்டம் சாங்குக்கு ஆடப்போகும் நடிகைகள் அத்தனை பேரும் இனிமேல் சின்மயி வாய்ஸுக்குத்தான் ஆடுவேன் என்று கண்டிஷன் போடுமளவுக்கு வட இந்தியா முழுக்க வைரலாகி இருக்கிறாள் மேரி - See more /cinema.dinakaran.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக