வியாழன், 16 ஜூலை, 2015

தி.மு.க., மீது வைகோ வருத்தம்: கூட்டணி சேர்வதில் சிக்கல்

தி.மு.க.,வுடன் நெருக்கமாக இருந்த கட்சிகளான ம.தி.மு.க., - புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தல் வரையில் தி.மு.க., கூட்டணியில் நீடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது இடதுசாரி கட்சிகளுடன் கைகோர்த்து தனி அணி அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த அணியில் சமீபத்தில் ம.தி.மு.க.,வும் இணைந்துள்ளது. அதற்கான காரணம் தி.மு.க., தலைமை மீது வைகோவுக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் தான் என கூறப்படுகிறது. இதுபற்றி சென்னையில் நேற்று தன்னை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடம் வைகோ பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ம.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தி.மு.க., கூட்டணியில் சேரும் திட்டத்தில் தான் வைகோ நெருக்கம் காட்டினார். ஆனால் கருணாநிதி பேரன் திருமண விழாவில் வைகோ பேசிய பின் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசையை பேச வைத்தனர். அம்மாவின் ஆசியால் 19 மாதம் வேலூர் சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்து நேராக அம்மாவிடம் சென்று 19 சீட்டுக்காக கெஞ்சி கூத்தாடி கிடைக்கவில்லை என்றதும் அம்மாவை ஆதரிக்காமல்.....
அது வைகோவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தன்னை விட தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில் 'கூட்டணி கட்சிகளை அரவணைப்பதில் கருணாநிதிக்கு இருந்த பக்குவம் ஸ்டாலினிடம் இல்லை' என வேல்முருகனிடம் வைகோ தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.இவ்வாறு ம.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதற்கிடையில் தி.மு.க.. மீது புதிய தமிழகம் மனிதநேய மக்கள் கட்சியும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது. அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க., மீது புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த இரு கட்சிகளையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் தி.மு.க., நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். - நமது சிறப்பு நிருபர் தினமலர்.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக